Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவன் கை வைத்த உடன் பொங்கிய வைகை..கள்ளழகர் கால் பதிக்க மதுரைக்கு வருவது இதற்குத்தானாம்.. புராண கதை

Subscribe to Oneindia Tamil

மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி திருக்கல்யாணமும், திருத்தேரோட்டமும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. வைகை ஆற்றில் இறங்குவதற்காக இன்றைய தினம் அழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு வருகிறார் கள்ளழகர். மதுரைக்கு வைகை ஆறு வந்தது பற்றியும் அழகர் ஆற்றில் இறங்குவது ஏன் என்பது பற்றியும் புராண கதைகள் கூறப்படுகின்றன.

மதுரையின் அரசி மீனாட்சிக்கு சொக்கநாதருடன் திருமணம் என்றதும் மாநகரமே விழாக் கோலம் பூண்டு விட்டது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்றால் சும்மாவா? மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர்.

திருமணத்திற்கு நாள் குறித்த அன்று மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறையவே அப்பிக் கிடந்தது.

Madurai Chithirai thiruvizha 2023: Vaigai River Purana Story

தனது மணாளனை முதன் முதலாக சந்தித்த அனுபவம் அப்போது அவளை சிலிர்ப்பு கொள்ளச் செய்தது. எட்டு திக்கும் வென்று, இமயத்தையும் வென்றுவர சென்றபோதுதான் சிவபெருமானை முதன் முதலாக சந்தித்தாள் மீனாட்சி. சிவபெருமானின் பார்வை பதிந்த மாத்திரத்தில் அவளது மூன்று தனங்களில் ஒன்று மறைந்து போயிற்று.

Madurai Chithirai thiruvizha 2023: Vaigai River Purana Story

அப்போதுதான், தன்னுடைய மணாளன் இவரே என்று எண்ணி, நாணினாள். ஒரு நல்ல நாளில் பூலோகம் வந்து மணந்து கொள்வதாக சிவபெருமான் உறுதியளித்ததை இப்போதும் நினைத்து மகிழ்ந்தாள். அப்போது, அவள் ஆவலோடு எதிர்பார்த்த சிவபெருமான் மாப்பிள்ளையாக வந்து கொண்டிருந்தார்.

மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள், தேவகனங்களும் உடன் வந்தனர். புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலன்களாகவும் கொண்டு காட்சிதரும் சிவபெருமான் அந்த கோலத்தில் இருந்து மாறியிருந்தார். சுந்தரேசுவரராக மிகவும் அழகாக மதுரை மாப்பிள்ளையாக வந்தார்.

திருமணத்திற்கு குறித்த நல்ல நேரம் வந்ததும் மீனாட்சியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தனது மனைவியாக ஏற்றுக் கொண்டார். திருமணம் முடிந்ததும் தடபுடலாக விருந்து நடக்குமே? அது மீனாட்சி கல்யாணத்திலும் நடந்தது. மலைபோல் சாதம் சமைக்கப்பட்டது. அதில் ஒரு பகுதி மட்டுமே காலியாகி இருந்தது.

இதையறிந்த மீனாட்சி, அதுபற்றி தனது மணாளன் சிவபெருமானிடம் கூறினார். உடனே சிவபெருமான் குண்டோதரர்கள் இருவரை அங்கு வரவழைத்தார். மீதமுள்ள சாதம், பலகாரங்களை சாப்பிடுமாறு அவர்களை பணித்தார். அவர்கள் இருவரும் அடுத்த சில நிமிடங்களிலேயே அத்தனை உணவு வகைகளையும், பலகாரங்களையும் வேகமாக தின்று தீர்த்து விட்டனர்.

Madurai Chithirai thiruvizha 2023: Vaigai River Purana Story

தாகத்தை தணிக்க பெரிய அண்டாக்களில் இருந்த தண்ணீரை மடக் மடக் என்று குடித்தனர். பெரிய அண்டாக்கள் எல்லாம் அவர்களுக்கு சிறிய டம்ளர்கள் போல் இருந்தன. அந்த தண்ணீர் அவர்களுக்கு போதவில்லை. தாகம்... தாகம்... என்று கத்தினார். அப்போது சிவபெருமான், தன் கையை வைத்து அங்கு ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதி நீரை குடித்து குண்டோதரர்கள் தாகம் தணிந்தனர். சிவபெருமான் தன் கையை வைத்து உருவாக்கியதால் அந்த நதி வைகை ஆயிற்று.

இது ஒருபுறம் இருக்க சித்ரா பவுர்ணமி நாளில் வைகை ஆற்றில் கள்ளழகர் கால் பதித்து மக்களுக்கு அருள்பாலிக்கிறார். தனது வருகைக்காக வைகை ஆற்றில் தவளையாக தவமிருக்கும் முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கவே கள்ளழகர் மதுரைக்கு வருகிறார் என்கிற புராண கதையும் உள்ளது.

மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை சித்ரா பவுர்ணமி நாளில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை முன்னிட்டு வைகை அணையிலிருந்து 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Madurai Chithirai thiruvizha 2023: Vaigai River Purana Story

அதன்படி, கடந்த மாதம் 30ஆம் தேதி வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வைகையாற்று பகுதியை வந்தடைந்தது. கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக ஆறு நாட்களில் விநாடிக்கு 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக வைகையில் திறக்கப்பட்ட தண்ணீருடன் வெள்ள நீரும் வைகையில் பெருக்கெடுத்துள்ளது.

சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியை முன்னிட்டு கள்ளழகர் மதுரையை நோக்கி இன்று புறப்படுகிறார். நாளை அதிகாலை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது. இந்த நிலையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறை காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

வைகையாற்றுக்குள் இறங்கி கள்ளழகரை தரிசிக்க 3 புதிய பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இடத்தை சுற்றி 9 இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், 350 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+