மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் எப்போது? டிக்கெட்டை பெறுவது எப்படி?
மதுரை: மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண டிக்கெட்டை ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வரும் மே 8ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த திருக்கல்யாணத்தை காண இரு வகையான டிக்கெட்டுகளை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது ரூ 200, ரூ 500 டிக்கெட்டுகள்.

இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும் கட்டணச் சீட்டு பெறாதவர்கள் இடவசதிக்கு ஏற்ப தெற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவர். hrce.tn.gov.in மற்றும் madurai meenakshi.hrce.tn.gov.in ஆகிய இரு இணையதளங்களில் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம்.
ரூ 500 கட்டணச் சீட்டு ஒரு நபருக்கு இரண்டும், ரூ 200 கட்டணச் சீட்டு ஒருவருக்கு மூன்றும் வழங்கப்படும். ஒரே நபர் இரு வேறு டிக்கெட்டுகளை பெற முடியாது. ஆதார், மொபைல் எண், அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும். கோயில் அருகே மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் விடுதியில் நேரடியாகவும் கட்டணச் சீட்டை பெறலாம். இவ்வாறு மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை சித்திரை திருவிழா தொடங்க போகிறது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக விழா, திக்விஜய வைபவம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும். திருக்கல்யாணத்தை காண வரும் பெண்களும் தங்கள் தாலிச் சரடை மாற்றிக் கொள்வார்கள்.
அன்றைய தினம் திருமணக் கோலத்தில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் கோயிலை வலம் வருவார்கள். மாலையில் பூப்பல்லக்கு வாகனத்தில் உலா வருவார்கள். இதையடுத்து திருத்தேரோட்டமும் நடைபெறும். திருக்கல்யாண வைபவத்தையொட்டி மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் திருமண விருந்து ஏற்பாடு செய்யப்படும். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண ஏராளமானோர் மாசி வீதிகளில் கூடுவர்.
இந்த திருக்கல்யாணத்தை பார்வையிட முன்பதிவு செய்து டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமே காண முடியும். டிக்கெட் பெறாதவர்கள் கோயிலை சுற்றி பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் எல்இடி திரையில் திருக்கல்யாணத்தை தரிசிக்கலாம்.
மதுரையில் முக்கிய திருவிழாக்களில் முக்கியமானது சித்திரை திருவிழாதான். கொடியேற்றம் தொடங்கி தேரோட்டம் வரை களைகட்டும். அழகர் மலையில் இருந்து வைகையில் இறங்கி வரும் கள்ளழகரை வரவேற்க எதிர்சேவை தொடங்கி அவர் வைகையில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் கொடுத்து விட்டு திரும்பும் வரைக்குமே பக்தர்கள் கூட்டம் மதுரையில் அலைமோதும்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications