மகா சிவராத்திரி: கன்னியாகுமரியில் பக்தி பரவசத்துடனான 110 கிமீ 'சிவாலய ஓட்டம்' பிப்.25-ல் தொடக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகா சிவராத்தியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் சிவாலய ஓட்டம் வரும் 25-ந் தேதி தொடங்குகிறது. மகா சிவராத்தி 26-ந் தேதி கொண்டாடப்படும் நிலையில் சிவாலய ஓட்டத்துக்கு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். மொத்தம் 110 கிமீ இந்த சிவாலய ஓட்டம் நடைபெறும்.

மகா சிவராத்திரி வரும் 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி நாளில் இரவு முழுவதும் கண்விழித்து அதிகாலையில் சிவபெருமானை வழிபடுவது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் சிவாலய ஓட்டம் நிகழ்வு பிரசித்தி பெற்றது.

Maha Shivaratri 2025 110 km Shivalaya Run in Kanyakumari to Begin on Feb 25

எங்கிருந்து தொடங்கும்?

சிவராத்திக்கு முந்தைய நாள் கன்னியாகுமரி முன்சிறை திருமலை சூலபாணி மகாதேவர் கோவிலில் இருந்து சிவாலய ஓட்டம் தொடங்கும். கன்னியாகுமரி மாவட்டத்தின் 12 சிவாலயங்களையும் சென்றடைந்து இறுதியாக திருநட்டாலம் சங்கரநாயனார் கோவிலில் முடிவடைவதுதான் இந்த சிவாலய ஓட்டம்

12 சிவாலயங்கள் எவை?

திருமலை சூலபாணி மகாதேவர் கோவில் (தொடக்கம்)
திக்குறிச்சி மகாதேவர் கோவில்
திற்பரப்பு வீரபத்திரர் கோவில்
திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில்
பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில்
திருப்பன்னிபாகம் கிராதமூர்த்தி கோவில்
கல்குளம் நீலகண்டசாமி கோவில்
மேலாங்கோடு காலகாலர் கோவில்
திருவிடைக்கோடு சடையப்பர் கோவில்
திருவிதாங்கோடு பக்தவல்சன் கோவில்
திருப்பன்றிகோடு பருதிபாணி மகாதேவர் கோவில்
திருநட்டாலம் சங்கரநாயனார் கோவில் (முடிவு)

என 12 சிவாலயங்களையும் ஓட்டமாக சென்று வழிபாடு நடத்துவதுதான் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம்.

மாசி ஏகாதசி நாள் முதல் விரதம்

இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி நாளில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர். இந்த விரத காலத்தில் காலை. மாலை இருநேரங்களிலும் புனித நீராடி சிவாலயத்தில் வழிபாடு செய்வர்.

110 கிலோ மீட்டர் சிவாலய ஓட்டம்

சிவாலய ஓட்டம் தொடங்கும் போது காவி உடை தரித்து கைகளில் விசிறியுடன் சரண கோஷங்களை எழுப்புவர். மொத்தம் 110 கிலோ மீட்டர் தூரம் சிவாலய ஓட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த சிவாலய ஓட்டத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பங்கேற்பர்.

சிவாலய ஓட்ட வழிபாட்டு முறை

சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள், ஒவ்வொரு சிவாலயமாக சென்று அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடிவிட்டுதான் சிவபெருமானை வணங்க வேண்டும் என்பதும் ஐதீகம். அப்போது தாங்கள் கைகளில் கொண்டு செல்லும் விசிறியை கொண்டு இறைவனுக்கு விசிறியும் விட வேண்டும்.

எப்ப்போது நிறைவடையும்?

சிவாலய ஓட்டமானது மகா சிவராத்தி நாளான பிப்ரவரி 27-ந் தேதி அதிகாலை நிறைவடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+