Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முன் ஜென்ம பாவங்கள் தீர.. பித்ருக்களின் ஆசி பெற.. மகாளய அமாவாசையில் இந்த விசயத்தை மறக்காதீர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமாவாசை தினத்தன்று பசுக்களுக்கு அகத்திக்கீரையும் பழமும் கொடுத்து வழிபடுவார்கள். அதேபோல முன்னோர்களுக்கு படையலிட்டு காகங்களுக்கு உணவு படைத்து விட்டு சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. மகாளய அமாவாசை கடைபிடிக்கப்பட உள்ள இந்த நேரத்தில் பசுக்களுக்கு ஏன் அகத்திக்கீரை தர வேண்டும் காகங்களுக்கு ஏன் கட்டாயம் உணவு அளிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

பசுக்கள் காமதேனுவின் அம்சம். மகாலட்சுமியின் வடிவமாகவே பசுக்களை பார்க்கிறோம். பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும். பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

Mahalaya Amavasai 2023: Dont forget this thing on Mahalaya Amavasha day

நாம் ஏதோ ஒரு பிறவியில் அறிந்தும் அறியாமலும் தவறு செய்திருப்போம். அந்த பாவத்திற்கு தண்டனை இந்த பிறவியில் கிடைக்கும். அதனால் கஷ்டங்களும் தடைகளும் வந்து கொண்டிருக்கும். நம்முடைய பாவங்கள் தீர நாம் சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.

முக்கியமான பரிகாரம் பசுக்களுக்கு அகத்திக்கீரையும் பழங்களும் கொடுப்பது. நாம் அமாவாசை நாளில் பசுக்களுக்கு வாழைப்பழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வழிபட வேண்டும். அப்போது "ஸர்வ காம துகே தேவி ஸர்வ தீர்த்தாபிசோசினிபாவனே ஸுரபி ஸ்ரேஷ்டேதேவி துப்யம் நமோஸ்துதே!" என்று மந்திரம் கூறி வழிபட வேண்டும். இதன் மூலம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும். நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும்.

மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது. ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதி எனப்படும் மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி கடக்க இயலாமல் தவிக்கிறது. பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை.அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற,அதன் வாலைப் பிடித்துக் கொண்டு் வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது. எனவேதான் பசு தானம் செய்வது போல அகத்திக்கீரை கொடுப்படும் புண்ணியத்தை தருகிறது

அதே போல மகாயள அமாவாசை தினத்தன்று காகத்திற்கு பலரும் உணவு வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு விரதத்தை முடிப்பது வழக்கம். காகங்கள் சாதத்தை எடுத்துக்கொண்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கிறது என்பது நம்பிக்கை. முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை வழிபாட்டில் காகங்களுக்கு உணவு படைத்து வழிபடுவது அவசியம்.

பறவை இனங்களில் காகத்திற்கும் மனிதர்களுக்கும் தொடர்பு உள்ளது. முன்னோர்கள் வடிவத்தில் காகத்தை பார்ப்பதால்தான் உணவு கொடுக்கிறோம். காகங்கள் வீட்டிற்கு தேடி வந்து சாப்பிடுகின்றன. சனிபகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்குமென்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.

காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனி பகவானுக்கு மகிழ்ச்சி தருமாம். எமதர்ம ராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம்.

காகங்கள் சுத்தமானவை தினசரி இரண்டு முறை குளிக்கும். தனது துணை இறந்தால் ஒழிய வேறு துணை தேடாது. தூய்மையான ஒழுக்கமான பறவை. கூடி சாப்பிடும் ஒற்றுமையின் சின்னம். தனது இனத்தை சேர்ந்த ஒரு காகம் இறந்தால் கூடி துக்கம் அனுஷ்டிக்கும் எனவேதான் பித்ருக்கள் வடிவத்தில் காகத்தை பார்க்கிறோம்.

நம்மால் தினசரியும் பத்து பேருக்கு சாதம் கொடுக்க முடியாது. அப்படி அன்னதானம் செய்ய முடியாதவர்கள். தினசரியும் காகங்களுக்கு ஒரு கைப்பிடி உணவு வைத்துவிட்டு சாப்பிடுவதை பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைவார்கள். தோஷங்களும் நீங்கும். அமாவாசை திதி கொடுக்கும் நாட்களில் காகங்களுக்கு உணவு வைக்கும் போது அவை எடுக்காவிட்டால் நம்முடைய முன்னோர்களுக்கு நம் மீது ஏதோ கோபம் இருக்கிறது என்று அர்த்தம். எனவே அவர்களை முதலில் திருப்திபடுத்த வேண்டியது அவசியம்.

காலை நேரத்தில் சாதம் வைத்து காகத்தை நாம் அழைக்கும் பொழுது தனியாக வருவதில்லை கூட்டமாக அழைத்து வந்து பகிர்ந்து சாப்பிடும். நம்முடைய முன்னோர்கள்தான் நம் வீட்டிற்கு காகங்கள் வடிவத்தில் வருகின்றன. ஒற்றுமையாக கூடி வாழும் காக்கைகளுக்கு உணவு கொடுப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமை வேண்டும் நீடிக்கும் என்பது நம்பிக்கை.

ஏழரைச் சனி, அஷ்டமத்துச்சனி, அர்த்தாஷ்டமச் சனி நடப்பவர்கள் காகத்திற்கு அன்னம் வைத்து அதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம்.
காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது நிஜமாகவே பித்ருக்களின் ஆசி கிடைக்கிறது. அதுமட்டுமல்லாது செய்வினை கோளாறுகள் நம் வீட்டுப்பக்கமே எட்டிப்பார்க்காது தீராத கடன் தொல்லைகள் தீரும். எனவே மகாளய அமாவாசை இந்த ஆண்டு சனிக்கிழமை சனி அமாவாசை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எனவே நாம் மறக்காமல் நம்முடைய முன்னோர்களுக்கு உணவு படைத்து வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் தீருவதோடு முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+