மகாளய பட்சம் 2023: நம்மோடு வசிக்கும் முன்னோர்கள்.. மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்
சென்னை: ஆடி அமாவாசை நாளில் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நம்முடைய முன்னோர்கள் புரட்டாசி மாதம்14 நாட்கள் மகாளய பட்ச காலத்தில்
நம்முடன் தங்கி இருப்பதாக ஐதீகம். தை அமாவாசை நாளில் மீண்டும் பித்ரு லோகத்திற்கு திரும்ப செல்கின்றனர். நம்முடன் தங்கியிருக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் அதே நேரத்தில் நாம் சில தவறுகளை மறந்தும் செய்யக்கூடாது என ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பித்ருக்களின் ஆராதனைக்கு "மஹாளயம்" என்று பெயர். புரட்டாசி மாதம், தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள
பதினைந்து திதிகளே மஹாளய பட்சமாகும். நமக்கு இந்த உடலைக் கொடுத்தவர்கள் தாய், தந்தையர். நம்மை ஆளாக்க, தாங்கள் அனுபவித்த கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் நற்கதி அடைந்த அவர்களுக்கும், முன்னோர்களுக்கும் வருடத்தில் 365 நாட்களும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிராயச்சித்தமாகவும் மஹாளயபட்ச தர்ப்பணமுறை அமைந்துள்ளது.

தென்புலத்தார் என்போர் இறந்த எமது மூதாதையினராவர். அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களின் ஆசி எம்மை
வாழவைக்கும் என்றும், அவர்களை வாழ்த்தி அவர்களின் ஆசியைப் பெறுவது மானிடனாகப் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எமது கடமை என்றும் வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்டுள்ளார். பித்ருக்களை நாம் அவமதித்தால் அல்லது அவர்களை உதாசீனம் செய்தால் அவர்கள் எம்மை சபித்து விடுவார்கள் என்பதும், ஆதனால் நாம் குடும்ப வாழ்கையில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்பதும் இந்துகளின் ஐதீகம்.
சிலரது வீட்டில் திருமண தடை ஏற்படும். புத்திரபாக்கிய தடை உண்டாகும். திருமணம் நடந்து குழந்தை பிறந்தாலும் குறை உள்ள பிள்ளைகள் பிறப்பார்கள். நம்முடைய வீட்டில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று யோசிக்கும் போது ஜோதிடர்கள் பித்ரு தோஷம் இருக்கிறது என்று சொல்வார்கள்.
பித்ரு தோஷமானது நம்மை அறியாமலேயே நம்முடைய முன்னோர்களை அவமதித்து இருப்போம். அவர்கள் மனம் வருத்தப்பட்டிருப்பார்கள். மறைந்த முன்னோர்களுக்கு நாம் தர்ப்பணம் தராமல் இருந்திருப்போம். எனவே அமாவாசை நாட்களில் தான தர்மங்கள் செய்து முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்தால் மறைந்த முன்னோர்களின் ஆசி கிடைக்கும் பித்ரு தோஷம் நீங்கும்.
மஹாளயபட்ச நாட்களான பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு அவர்களின் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ தர்ப்பணம் அளிக்க
வேண்டும் என்றார்கள்.
இதன் மூலம் முன்னோர்கள் பசியாறி திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் திதி கொடுக்காதவர்கள் கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த குருமார்களை வைத்து முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மகாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும்.
பிரதமையில் தர்ப்பணம் அளித்தால் செல்வம் பெருகும்
துவிதியை திதியில் தர்ப்பணம் அளித்தால் வாரிசு வளர்ச்சியடையும்
திருதியை திதியில் தர்ப்பணம் அளித்தால் திருப்திகரமான இல்வாழ்க்கை அமையும், திருமணம் கைகூடி வரும்.
சதுர்த்தி திதியில் தர்ப்பணம் அளித்தால் பகை விலகும் எதிரிகள் தொல்லை நீங்கும்
பஞ்சமி: விரும்பிய பொருள் சேரும்
சஷ்டி திதியில் தர்ப்பணம் அளித்தால் தெய்வீகத் தன்மை ஓங்கும்
சப்தமி திதியில் தர்ப்பணம் அளித்தால் மேலுலகோர் ஆசி கிடைக்கும்
அஷ்டமி திதியில் தர்ப்பணம் அளித்தால் நல்லறிவு வளரும்
நவமி திதியில் தர்ப்பணம் அளித்தால் ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை
தசமியில் தர்ப்பணம் அளித்தால் தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்
ஏகாதசியில் தர்ப்பணம் அளித்தால் வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறக்கலாம்
துவாதசி தர்ப்பணம் அளித்தால் தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்
திரியோதயில் தர்ப்பணம் அளித்தால் நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்
சதுர்த்தசியில் தர்ப்பணம் அளித்தால் முழுமையான இல்லறம் கணவன் -மனைவி ஒற்றுமை நீடிக்கும்.
அமாவாசை திதியில் தர்ப்பணம் அளித்தால் மூதாதையர், ரிஷிகள் தேவர்களின் ஆசி கிட்டும்.
இன்றைய தினம் மகாளய பட்ச காலம் தொடங்குகிறது. இன்று முதல் மகாளய அமாவாசை நாள் வரைக்கும் நம்முடைய முனனோர்கள் நம்முடன் தங்கியிருப்பார்கள். இந்த நாட்களில் நாம் வீட்டினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வீட்டில் சண்டை சச்சரவுகள் இருக்கக் கூடாது. அக்கம் பக்கத்தினருடன் சண்டை போடக்கூடாது. ஆபாச படங்களை பார்த்தல், தாம்பத்ய உறவு கொள்வது கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. வீட்டு வாசலை சுத்தமாக வைத்துக்கொள்ளும் இந்த நேரத்தில் கோலம் போடக்கூடாது. தேவையற்ற எதிர்மறை சக்திகளை அதிகரிக்கக் கூடிய பேச்சுகளை பேசக்கூடாது. நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கக் கூடிய பேச்சுக்களை மட்டுமே பேச வேண்டும். புனித நீர் நிலைகள் உள்ள இடங்களுக்கு சென்று நீராடி நாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும்.
தர்ப்பணம் தருவதற்கு வெளி இடங்களுக்கு செல்ல முடியாதவர்கள் நம்முடைய வீட்டிலேயே நாம் தர்ப்பணம் தரலாம். ஏழைகளுக்கு உதவி செய்யலாம். மகாளய பட்ச காலத்தில் அன்னதானம் தருவது ஏழு ஜென்ம பாவங்களைப் போக்கும். அக்டோபர் 14ஆம் தேதி மகாளய அமாவாசை தினமாகும். எனவே மறக்காமல் நாம் முன்னோர்களுக்கு இந்த நாட்களில் தர்ப்பணம் தர பித்ரு தோஷங்கள் நீங்கி முன்னோர்களின் ஆசியால் சுப காரியத்தடைகள் நீங்கும்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications