மகா சிவராத்திரி நாளில் கும்ப ராசியில் கிரகங்கள் கூட்டணி.. சிவனின் அருள் யாருக்கு கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகா சிவராத்திரி நாளில் சனி பகவானின் வீடான கும்ப ராசியில் சனி, சூரியன், சுக்கிரன், மற்றும் சந்திரன் ஆகிய நான்கு கிரகங்களும் கூட்டணி அமைந்துள்ளன. ராகுவும் புதனும் மீன ராசியில் இணைந்துள்ளன. இந்த கிரகங்களின் சேர்க்கையால் மகாசிவராத்திரி நாளில் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் என்ன பொருட்களால் சிவபெருமானை அபிஷேகம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி நாதனுடன் கிரகங்கள் இணைந்துள்ளன. ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன. மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். சொந்த பந்தங்களின் வருகை அதிகரிக்கும். சிவ பெருமானின் ஆசியுடன் முன்னோர்களின் ஆசியும் பரிபூரணமாகக் கிடைக்கும். மகாசிவராத்திரி தினமான இன்று சிவனின் நான்கு கால அபிஷேகத்திற்கு பன்னீர் வாங்கித்தரலாம்.

Mahasivarathri 2024 4 planets combination in Kumbam rasi prediction for Thulam to Meenam

விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்திலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் கிரகங்கள் கூட்டணி அமைத்துள்ளன. சுகமான நாட்களாக அமையப்போகிறது. வீடு மனை வாங்குவதற்கான யோகங்கள் தேடி வரும். முன்னோர்களின் ஆசி கிடைக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். மகாசிவராத்திரி அன்று சிவ பெருமானின் பூஜையில் தேனை சேர்த்துக்கொள்வது விசேஷ பலன்களைத் தரும்.

தனுசு: மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் நான்கு கிரகங்களும், சுக ஸ்தானத்தில் இரண்டு கிரகங்களும் இணைந்துள்ளன. சிவபெருமானின் ஆசியால் உங்களின் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இன்றைய தினம் சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்யலாம். மல்லிகைப்பூக்களை அலங்காரத்திற்கு வாங்கித்தரலாம்.

மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களுக்கு இரண்டாம் வீட்டிலும் மூன்றாம் வீட்டிலும் கிரகங்கள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த நாட்களில் நீங்கள் மன அமைதியை நாட இறைவழிபாடு செய்வது அவசியம். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. நிதானத்தை தவற விட வேண்டாம். பண வருமானம் அதிகரிக்கும் சேமிப்பும் உயரும். மகாசிவராத்திரி நாளில் சிவனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்வதுடன் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய மன குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே உங்கள் ராசியிலே நான்கு கிரகங்கள் கூடியுள்ளதால் பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கும். சிவபெருமானின் அருள் கிடைக்க மகாசிவராத்திரி நாளில் பால் அபிஷேகம் ருத்ராபிஷேகம் செய்யலாம். சாமந்தி மலர்களால் அர்ச்சனை செய்யலாம். இதன் மூலம் உங்களுக்கு சிவபெருமானின் பரிபூரண பேரருள் கிடைக்கும்.

மீனம்: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, உங்கள் ராசியிலும் விரைய ஸ்தானத்திலும் கிரகங்கள் கூடியுள்ளன. உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திடீர் பண வரவும் வரும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். மனதில் ஏற்பட்ட பாரங்கள் நீங்க சிவபெருமானுக்கு பாலும் பன்னீரும் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம். மகாசிவராத்திரி நாளில் தும்பை பூக்களால் அர்ச்சனை செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+