Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபரிமலை மகரவிளக்கு பூஜை நிறைவு.. ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க இன்றே கடைசி.. நாளை நடை அடைப்பு

Subscribe to Oneindia Tamil

சபரிமலை: ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை கால வழிபாடுகள் நிறைவடைய உள்ளதால் இன்று இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தமிழக பக்தர்கள் ஊர் திரும்ப ஏதுவாக நாளை அதிகாலை வரை பம்பையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோவில் கார்த்திகை மாதம் 1ஆம் தேதியன்று மண்டல கால பூஜைக்காக திறக்கப்பட்டது. நவம்பர் 17ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 27ஆம் தேதி வரை மண்டலபூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு நடை அடைக்கப்பட்டது.

Makaravilakku pooja ends today is the last day for Devotees dharasan in Sabarimala Ayyappan

மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. கடந்த 15ஆம் தேதியன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை நடைபெற்றது. பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்பப் பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல்லிலே நிறுத்தப்படும். பின்பு கேரள அரசுப் பேருந்துகள் மூலமே பம்பைக்கு செல்ல முடியும். அங்கிருந்து சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து சென்று வருகின்றனர்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவ.16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. டிச.27-ல் நடைசாத்தப்பட்டு மகரவிளக்கு பூஜைக்காக டிச.30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது. மண்டல, மகர விளக்கு வழிபாட்டுக்கு வந்த பக்தர்களுக்காக இரவும், பகலும் ஏராளமான பேருந்துகள் நிலக்கல்லில் இருந்து இருமார்க்கமாகவும் இயக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று இரவு 10 மணியுடன் பக்தர்களுக்கான தரிசன காலம் முடிகிறது. ஹரிவராசனம் பாடி கோவில் நடை இன்றிரவு அடைக்கப்படும். நாளைய தினம் அதிகாலை கோவில் நடை திறக்கப்படும். பந்தளம் ராஜ குடும்பத்தினரின் சுவாமி தரிசனத்துக்குப் பிறகு காலை 6 மணியுடன் நடை சாத்தப்படுகிறது. அத்துடன் நடப்பு ஆண்டுக்கான மகரவிளக்கு வழிபாட்டு காலம் நிறைவடைகிறது.

சொந்த ஊர் திரும்பும் கடைசி நேர பக்தர்களுக்காக பம்பையில் இருந்து சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இன்று இரவு முழுவதும் பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு நேர வரையறை இன்றி தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரை நீண்டதூர பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து கேரள அரசு போக்குவரத்துக் கழக பம்பை சிறப்பு அதிகாரிகள் கூறுகையில், ''மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் பம்பை-நிலக்கல் வழித்தடத்தில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் முறை பேருந்துகள் இயக்கப்பட்டன. தொலைதூரத்துக்கு 34 ஆயிரம் பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதில் 64.25 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.38.88 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கான தரிசன காலம் இன்றுடன் முடிவடைய உள்ளதால் அன்று இரவு முழுவதும் தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்படும். நாளை அதிகாலை 4 மணி வரை செங்கனூர், கோட்டயம், குமுளி, திருவனந்தபுரம், திருச்சூர் போன்ற நீண்ட தூரத்துக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை காலம் நிறைவடைந்ததை அடுத்து நாளையுடன் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 13ஆம் தேதி மீண்டும் சபரிமலையில் நடை திறக்கப்பட உள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+