திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல் 22: ஆண்டாள் அருளிய பாசுரங்களை மார்கழியில்தான் பாட வேண்டுமா?

Subscribe to Oneindia Tamil

திருப்பாவை - பாடல் 22

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பாடல் பொருள்: கோபியர்களே நீங்கள் எல்லாரும் வந்த காரணம் என்ன என கண்ணன் கேட்கிறான். அதற்கு உன்னை விட்டுப் பிரிந்திருந்த சாபம் நீங்க வேண்டும். இனியும் அப்படி ஒரு நிலை ஏற்படக் கூடாது, அரசர்கள் எல்லாம் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும் சத்சங்கத்திற்கு வந்த பக்தர்கள் போல் காத்துக் கிடக்கிறார்கள். அவர்களை போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். சந்திரனும் சூரியனும் உதித்தது போல் அந்த கண்களைக் கொண்டு எங்களைப் பார்த்தால் எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்துவிடும்!

margazhi thiruppavai

விளக்கம்: இறைவனின் கடைக்கண் பார்வை பட்டால் போதும். சாபங்கள் கருகி போகும். ஆண்டாள் பாடிய திருப்பாவையை மார்கழியில் மட்டுமல்லாமல் எந்தநாளும் பக்தியுடன் படிக்கலாம். அதற்கு நேரமில்லாவிட்டால் கோவிந்தா, விக்ரமா போன்ற எளிய வார்த்தைகளை சொன்னால் போதும், இறைவனின் பார்வை பட்டுவிடும்.

திருப்பள்ளியெழுச்சி பாடல் - 2

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழுவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிறை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.

பாடல் பொருள்: திருப்பெந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! சூரியன் கிழக்கு திசையில் உதித்துவிட்டான், உனது முகத்தில் காணும் கருணை ஒளியைப் போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து இருளை நீக்கி வெளிச்சத்தை கொடுத்துவிட்டான். உனது கண்களைப் போன்ற மலர்கள்விட்டன. பூக்கள் மலர்ந்ததைப் பார்த்து வண்டுக் கூட்டங்கள் ரீங்காரமிட்டு இசைப் பாடத் தொடங்கின. பொருட்செல்வத்தை வாரி வழங்கும் ஆனந்த மலையே, அலைகள் அடிக்கும் கடலே, பள்ளி எழுந்தருளாய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+