மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம்.. பழைய தாலி கயிறு என்ன செய்யலாம்? தாலி மாற்ற சரியான நேரம் எது?
மதுரை: மதுரையில் நாளை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.. இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தின் போது, ஒட்டுமொத்த மதுரை மக்களின் பெண்களும் தாலி கயிறை புதுப்பித்து கொள்வது வழக்கம். இதற்கான காரணங்கள் என்னென்ன? தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் என்ன? என்பதை சுருக்கமாக பார்க்கலாம். அதேபோல பழைய தாலி கயிறை என்ன செய்வது? அதை பற்றியும் பார்க்கலாம்.
உலகப்பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா, மதுரையில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக இந்த விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு நாளும் விழாக்கள் நடக்கின்றன.

தாலி கயிறு மாற்ற காரணங்கள்
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. வழக்கமாக, இந்த திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுந்தரேஸ்வரர், பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி, பவளகனிவாய் பெருமாள் ஆகியோர் மீனாட்சி கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார்கள்..
அப்போது மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்படும். அந்நேரத்தில் இந்த திருக்கல்யாணத்தை காண வந்திருந்த ஏராளமான பெண்கள் தாங்களும் தாலி சரடுகளை மாற்றிக் கொள்வார்கள்.
காரணம், மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண வைபவத்தை கண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. அதே போல் மீனாட்சி திருக்கல்யாணத்தன்று தாங்களும் தாலி சரடுகளை மாற்றிக் கொண்டால், தன்னை போல் மற்ற பெண்களுக்கும் அன்னை மீனாட்சி தீர்க்க சுமங்கலி வரத்தை அருள்வாள் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
திருக்கல்யாணம் நேரம்
அந்தவகையில், மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நாளை அதாவது மே 8ம் தேதி காலை 8 - 9 மணி வரையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். குறிப்பாக உத்திராடம் நட்சத்திரம் மே 7ம் தேதி மாலை 6.17 மணிக்கு தொடங்கி மே 8ஆம் தேதி இரவு 9.06 மணிக்கு முடிகிறது.
காலை 8 - 9 மணி வரையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும் என்பதால், அந்த நேரத்தில் பெண்கள் தாலி மாற்றி கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.
பழைய கயிறு என்ன செய்யலாம்
ஆனால் எப்போதுமே தாலி கயிறு மாற்ற நாள், கிழமை கண்டிப்பாக பார்க்க வேண்டும். தாலி கயிறு மாற்றுவதற்கு சந்திர தரிசனம், சுபமுகூர்த்த நாள், மேல் நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த்த யோகம் என்றுஎல்லாமே கூடி வரக்கூடிய அம்சமான நாளாக இருக்க வேண்டும்... முக்கியமாக தாலிக்கயிறு மங்குவது போல இருந்தால் மட்டுமே மாற்றவேண்டும்.
தாலிக்கயிற்றை புதிதாக மாற்ற திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டும் தான் மாற்ற வேண்டும். அப்படி மாற்றும்போது, பழைய கயிற்றை செடி, கொடிகளில் கட்டிவிடலாம். இல்லாவிட்டால் அருகிலுள்ள கோவிலில் உள்ள மரங்களில் கட்டிவிடலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் குப்பையில் தூக்கி போடக்கூடாது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications