துள்ளி ஓடும் முயல்.. கையில் பிடிப்பது போல கனவு வருதா? அப்போ ஜாக்பாட் வீடு தேடி வருமாம்
சென்னை: நம்முடைய கனவில் மனிதர்கள் மட்டுமல்ல பறவைகள், விலங்குகள், பாம்புகள் அடிக்கடி வந்து போகும். அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் இருக்கும். எனக்கு முயலை பிடிப்பது போல கனவு வருதே அதற்கு என்ன காரணம் என்று ஒருவா என்னிடம் கேட்டார். யாருக்கெல்லாம் எந்த மாதிரியான முயல் கனவு வருதோ அதற்கேற்ப பலனை அறிந்து கொள்ளுங்கள்.
முயல் வேட்டை: ஆடி மாதம் என்றாலே பலரும் முயல் வேட்டைக்கு செல்வார்கள். குழியில் இருக்கும் முயல்கள் துள்ளி விளையாடுவது போல சிலரது கனவில் வரும். கனவில் முயலை பார்ப்பது மகிழ்ச்சியான விசயத்தை கொண்டு வரும். என்ன கலர் முயலை கனவில் பார்க்கிறோம் என்பதை பொறுத்து பலன்கள் மாறுபடும். முயல் குட்டி போடுவது போல கனவில் வந்தால் தொழிலில் நீங்கள் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். முயலை வேட்டையாடி அதன் இறைச்சியை சாப்பிடுவது போல கனவில் வந்தால் உங்களின் உறவுகளால் நன்மைகள் அதிகரிக்கும்.

வெள்ளை முயல்: முயல் பேசுவது போல கனவில் வந்தால் உங்களுக்கு ஏதோ மகிழ்ச்சியான நல்ல செய்தி தேடி வரப்போகிறது.
உங்கள் கனவில் ஒரு வெள்ளை முயலைப் பார்ப்பது நீங்கள் பிறரிடம் காட்டும் உண்மையான அன்பை குறிக்கிறது. மேலும் வெள்ளை முயல் உங்களை சரியான திசையை நோக்கி நகர்த்துவதற்கான வழிகாட்டியாகவும் செயல்படுகிறது.
பழுப்பு நிற முயல்: உங்கள் கனவில் பழுப்பு நிற முயலை காண நேர்ந்தால் பொருளாதார இலக்கை அடைவீர்கள். நீங்கள் சரியான பாதையில் செய்ய இருப்பதை உணர்த்துகிறது. ஒருவேளை நீங்கள் சொத்து வாங்க முதலீடு கூட செய்யலாம். உங்கள் கனவில் ஒரு கருப்பு முயலைப் பார்ப்பது நெருக்கடிகளை குறித்து பயப்படுவதை குறிக்கும். நெருக்கடியை நினைத்து பயப்பட வேண்டாம். உங்கள் கனவில் நீல நிற முயலை பார்ப்பது உங்களுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி தேடி வந்து சேரும் என்பது நம்பிக்கை.
இறந்த முயல்: உங்கள் கனவில் இறந்த முயலை பார்ப்பது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை முன்னறிவிக்கிறது. ஒரு இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு முயல் உங்கள் கனவில் வந்தால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெறி கொண்டு முயல் உங்களை கடிப்பது போல கனவில் வந்தால் உங்கள் நண்பர்கள் உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
மகிழ்ச்சியான செய்தி: மிகப் பெரிய அல்லது இராட்சத முயல் உங்களுடைய கனவில் திடீரென வந்தால் வரவிருக்கும் அதிர்ஷ்டம் மிகப்பெரியதாக இருக்கப்போகிறது என்று அர்த்தம். நிறைய முயல்கள் குட்டி முயல்களை கனவில் கண்டால் உங்களுடைய குழந்தைகள் மூலம் நல்ல செய்தி தேடி வரப்போகிறது. திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரப்போகிறது. முயல் காயமடைவது போல கனவு வந்தால் உங்களுக்கு மிக நெருக்கமானவர் ஏதாவது ஆபத்தில் சிக்கப்போகிறார் என்று அர்த்தம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications