நவராத்திரி.. தீபாவளி பண்டிகை.. ஐப்பசி மாதத்தில் என்னென்ன விஷேசங்கள்.. விரத நாட்கள்
சென்னை: ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது. ஐப்பசி மாதத்தில் நவராத்திரி, அன்னாபிஷேகம், தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை தினங்கள் உள்ளன. எந்த நாளில் என்ன பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று உங்கள் டைரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஐப்பசி மாதம் துலாம் மாதம் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் துலா ஸ்நானம் முக்கியமானது. தமிழ் மாதத்தில் ஐப்பசி மாதம் ஏழாவது மாதம். இந்த மாதத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் நவராத்திரி பண்டிகை, ஐப்பசி அன்னாபிஷேகம், தீபாவளி, போன்றவை முக்கியமானவை. இந்த நாட்களில் என்ன செய்யலாம் என்று விரதமுறைகளை பார்க்கலாம்.

ஐப்பசி பௌர்ணமி அன்று கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த சிவனுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பல்வேறு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. பலவிதமான பண்டிகைகள் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன வாழ்க்கையில் உயர்வையையும் மேன்மையையும் கொடுக்கின்றன என்பது நம்பிக்கை. துலாம் மாதமான ஐப்பசி மாதத்தில் என்னென்ன விஷேசங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம்.
ஐப்பசி 1 அக்டோபர் 18 விஷு புண்ணிய காலம் - துலா ஸ்நானம் ஆரம்பம். காவிரியில் குளித்து ஸ்ரீரங்கநாதரை வழிபடலாம்.
ஐப்பசி 5 அக்டோபர் 22 துர்காஷ்டமி, மஹாஷ்டமி பத்ரகாளி அவதார தினம்
ஐப்பசி 6 அக்டோபர் 23 ,2020 மகா நவமி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை
ஐப்பசி 7 அக்டோபர் விஜயதசமி தொழில் தொடங்க, கல்வி, கலைகள் கற்க சிறப்பான நாள்
ஐப்பசி 11 அக்டோபர் 28 சனிக்கிழமை வாஸ்து நாள். ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் - சந்திர கிரகணம்
இன்று அன்னாபிஷேகம் சிவ ஆலயங்களில் அன்னத்தினால் அலங்கரித்து இருக்கும் சிவபெருமானை தரிசனம் செய்ய உணவு பஞ்சம் நீங்கும். தலைமுறைகளும் பசி பட்டினி இன்றி வாழலாம்.
ஐப்பசி 13 அக்டோபர் 30 திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 10 முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. ஐப்பசி 24 நவம்பர் 10, வெள்ளிக்கிழமை கோவத்ஸ துவாதசி இன்று பசுவையும் கன்றையும் வணங்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். பெண்கள், குழந்தைகள் நலமும் வளமும் பெற்று சிறப்புடன் வாழ்வார்கள்.
ஐப்பசி 25 நவம்பர் 11 சனிக்கிழமை யமதீபம் இன்று மாலை பிரதோஷ காலத்தில் வீட்டிற்கு வெளியில் கோலம் போட்டு மறைந்த முன்னோர்களுக்கு தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றி வழிபடலாம். நம் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் நொடிகள் நீங்கி ஆயுள் அதிகரிக்கும்.
ஐப்பசி 26 நவம்பர் 12 ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை இன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து லட்சுமி பூஜை செய்யலாம். இன்று கேதார கௌரி பூஜை செய்யலாம் 21 பாக்கு 21 வெற்றிலை வைத்து கௌரி பூஜை செய்யலாம். லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாளாகும்.
ஐப்பசி 27 ஆம் தேதி திங்கட்கிழமை சோமாவதி அமாவாசை அரசமரமும் வேப்பமரமும் இணைந்த மரத்தடியில் அருள்பாலிக்கும் விநாயகரை வழிபட நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications