நவராத்திரி.. பத்மநாபுரம் அரண்மனையில் இருந்து புறப்பட்ட அம்மன் சிலைகள்.. மாற்றப்பட்ட உடைவாள்
கன்னியாகுமரி: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து அம்மன் விக்ரகங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன. மன்னரின் உடைவாள் மாற்றி சுவாமி விக்ரகங்களை இரு மாநில போலீஸ் அணி வகுப்பு மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்து செல்லும் பாரம்பரிய நிகழ்ச்சியில் தமிழக, கேரளா அமைச்சர்கள் இரு மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன் பிறகு 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சிலைகள் யானை மற்றும் பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.
நவராத்திரி விழா நாட்களில் அங்கு சாமி சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்படும். விழா முடிவடைந்ததும் மீண்டும் சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பாரம் பரியமாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை வரும் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன், வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி விக்ரகங்கள் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டு தேவாரக்கட்டு அருள்மிகு சரஸ்வதி அம்மன் திருக்கோயிலை சென்றடைந்தன. அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் பூஜையில் வைக்கப்பட்டிருந்த மார்த்ததாண்டவர்மாவின் உடைவாள் கைமாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கேரள மாநில அமைச்சர்கள், தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு பாரம்பரிய முறைப்படி அணிவகுப்பு மரியாதை, நெற்றிப்பட்டம் சூடிய யானை அணிவகுக்கச் சுவாமி விக்ரகங்கள் புறப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வரும் 15ஆம் தேதி நவராத்திரி விழா கொண்டாடப்படுவதையொட்டி, பத்மநாபபுரத்தில் இருந்து சிலைகள் ஊர்வலமாக கேரளாவிற்குப் புறப்பட்டன. இன்றைய தினம் கேரளாவில் உள்ள களியக்காவிளையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது வரவேற்கிறார். மன்னராட்சிக்குப் பின்னரும், இந்த விழா மரபு மீறப்படாமல் குமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications