கண் திருஷ்டி.. செய்வினை கோளாறு.. எதிர்மறை எண்ணங்களை விரட்ட இதை செய்ய மறக்காதீர்கள்
சென்னை: சிலரது வீட்டிற்குள் நுழைந்தாலே போர்க்களமாக காட்சியளிக்கும் இதற்குக் காரணம் வீட்டிற்குள் இருக்கும் எதிர்மறை சக்திகள்தான். தீய சக்திகளை விரட்டி விட்டு நல்ல சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வர சில பரிகாரங்களை செய்வது அவசியம்.
நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் கல் உப்பு, காய்ந்த மிளகாய், எலுமிச்சம் பழம் போன்றவைகளுக்கு தீய சக்தியை விரட்டும் குணம் உண்டு. அதுபோல தீயசக்திகளால் ஏற்படும் பாதிப்பு மனதை சஞ்சலப்படுத்தும். வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் அதை குணப்படுத்த எளிமையான பரிகாரம் பண்ணலாம்.

ஒரு வீட்டில் எதிர்மறை சக்திகள் அதிகம் இருந்தால், அந்த வீட்டின் மனசஞ்சலங்கள் அதிகரிக்கும். சிலர் காலையில் நன்றாக இருப்பார்கள். ஆனால் மாலையில் உடலுக்கு என்னவென்றே சொல்லமுடியாத நிலை ஏற்படும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும். கல்யாணம் மற்றும் சுப நிகழ்வுகள் வீட்டில் நடக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும்.
வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஒருவரின் வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருப்பது அதாவது ஏதோ வேலைக்கு போகிறோம் வருகிறோம் என்று இருப்பது வாழ்க்கையே உப்பு சப்பில்லாமல் இருக்கும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் ஏற்படுத்த சில பரிகாரங்களை செய்ய வேண்டும். பைரவரின் துணை இருந்தால் பாதிப்புகள் குறையும். பைரவரின் கணங்களாக இருப்பவை வெண்கடுகு. இவைதான் நமக்கு எற்படும் பாதிப்புகளை நீக்கி நிம்மதியை தருபவை.
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். கண் திருஷ்டியால் சிலருக்கு உடல்நிலை கோளாறுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை. பணம் கிடைப்பதற்கு தாமதம். பணம் வந்தும் பற்றாக்குறை போன்றவை ஜாதகத்திற்கு, கிரக நிலைகளுக்கு அப்பாற்பட்டு, வீட்டிலிருக்கும் எதிர்மறை அதிர்வுகள் காரணமாக பாதிப்புகள் ஏற்படும். வீட்டிற்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏற்பட்டிற்கும் கண் திருஷ்டி, மேலும் கணவன் மனைவி குழுந்தைகளுடன் சேர்ந்து வெளியில் கிளம்பும்போது, ஏற்படும் குடும்ப கண் திருஷ்டி, சில குடுபங்களில் மாதம் ஒருமுறையாவது மருத்துவமனைக்கு செல்வது போன்ற விஷயங்களால், குடும்ப உறுப்பினர்களை பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு எளிமையான பரிகாரம் உள்ளது.
தீய சக்திகளை விரட்ட வெண் கடுகு அருமையான பொருள். இது கடவுள் தன்மையைக் கொண்டது. அது பைரவரின் தேவ கணம் ஆகும்.
வீடுகளில் மன அமைதி இல்லாமல், குடும்ப ஒற்றுமை இல்லாமல் உள்ளவர்கள் சாம்பிராணி தூபம் போடும் போது சிறிதளவு வெள்ளைக் கடுகை போட்டு விட்டு வீட்டில் அனைத்து அறைகளிலும் எடுத்துச் சென்று அந்தப் புகையைக் பரவ விட வேண்டும் பின்னர் பூஜை அறையில் அந்த தூபத்தை வைப்பது நல்லது. அதே போல மருதாணி விதையை கலந்து சாம்பிராணி தூபம் போட மனக்கவலைகள் நீங்கும்.
சுத்தமான காற்றும் சூரிய ஒளியும் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வருகின்றன. எனவே, வீட்டின் ஜன்னல்களை மூடி வைப்பதை விட திறந்து வைப்பதே நல்லது. ஒரு இடத்தில் சூரிய ஒளியால் வெளிச்சம் இல்லை என்றால், விளக்குகளை எரிய விடுவது அந்த அறையை பிரகாசமாகவும் நேர்மறையாகவும் மாற்றும்.
மீன் தொட்டி வைப்பது நேர்மறை சக்தியை அதிகரிக்கும். வீட்டின் வடமேற்கு திசையில் மீன் தொட்டியை வைப்பது நல்லது. குளியலறையை எப்போதும் மூடியே வைத்திருங்கள். பயன்பாட்டில் இல்லாதபோது, கழிப்பறையில் மூடி வைத்திருப்பது நல்லது. வீட்டில் கசியும் தண்ணீர் தொட்டி இருக்கக்கூடாது. குளியலறையில் துர்நாற்றம் வீசக்கூடாது.
வீட்டு வாசலில் குப்பைத் தொட்டி வைக்கக் கூடாது. சமையல் அறையில் உடைந்த பாத்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் நீண்ட காலமாக பயன்படுத்தாத பொருட்களை வீட்டிற்குள் இருந்து தூக்கி வீசுங்கள்.
வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி சுற்றிப்போட கல் உப்பையும் காய்ந்த மிளகாயும் பயன்படுத்துவார்கள். அதேதான் நம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை நீக்க பயன்படப்போகிறது. கல் உப்பு, காய்ந்த மிளகாய் 4, எலுமிச்சை பழம் 1. கண்ணாடி கோப்பை 1, இந்த பரிகாரம் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கும் ஒரு எளிய பரிகாரம். இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் செய்யவேண்டும். அப்போதுதான் பலன்கள் அதிகமாக கிடைக்கும்.

ஒரு கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி, ஒரு எலுமிச்சை பழத்தை கல் உப்பின் நடுவில் நிற்க வைக்கவேண்டும். பிறகு நான்கு காய்ந்த மிளகாயை அதனை சுற்றி நான்கு மூலைகளிலும் சொருக வேண்டும். மிளகாயின் கூர்மையான பகுதி எதிர்மறை சக்திகளை ஈர்த்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இதனை தலைவாசல் கதவின் உட்புற பகுதியின் மூலையில் வைக்கவேண்டும்.
இதனை வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றவேண்டும். அப்படி மாற்றும்போது கல் உப்பு, எலுமிச்சை பழம், காய்ந்த மிளகாயை ஆறு, குளங்களில் போட்டு விடலாம். அப்படி போட முடியாதவர்கள் மூன்று பொருட்களையும் சேகரித்து யார் காலிலும் படாதவாறு போட்டுவிடவேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதால் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கலாம்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications