"நெல்லையப்பர் இல்லையப்பானு" கேட்டு கோபப்பட்ட சித்தர்! தேடி போய் சமாதானம் செய்த ஈஸ்வரர்
சென்னை: கோபித்துக் கொண்டு சென்ற சித்தரை தேடி போய் நெல்லையப்பர் சமாதானம் செய்ததாக வரலாறு கூறுகிறது. சித்தர் எதற்காக கோபித்துக் கொண்டார், கடவுள் எதற்காக தேடிச் சென்றார் என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: கோபித்துச் சென்ற சித்தரை தேடிச் சென்று சமாதானம் செய்த இறைவன்.
கொங்கு நாட்டில் உள்ள கருவூரில் (கரூர்) பிறந்தவர் கருவூர் சித்தர். கருவூரார் என்று அழைக்கப்படும் இவர், இளம் வயதிலேயே வேதம் மற்றும் ஆகமங்களைக் கற்று தேர்ச்சி பெற்றவர்.

யோக சித்திகள் கைவரப் பெற்றவர். போகரை குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றவர். தனது யோக சித்தியால் அற்புதங்களை செய்திருக்கிறார்.
இவர் பல்வேறு இடங்களில் உள்ள தலங்களைத் தரிசித்து விட்டு தென்பாண்டிநாட்டுத் திருப்புடைமருதூர் சென்று, இறைவனிடம் திருவடி தீட்சை பெற்றார். பின்னர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றார்.
அப்போது நிவேதன காலம். இறைவனை "நெல்லையப்பா" என்று மூன்று முறை சித்தர் அழைத்தும் இறைவனின் தரிசனம் கிடைக்கவில்லை.
இதனால் கோபமடைந்த சித்தர், "அட, இங்கே நெல்லையப்பன் இல்லையாப்பா?" என்று நகைப்புடன் கூறிவிட்டு வெளியேறினார். இவர் இவ்வாறு கூறவும் சுற்றி எருக்கம், வேண்டாத செடிகளும் முளைத்து கோவிலை மறைத்து நின்றன.
அங்கிருந்து திரும்பி பாராமல் நடந்தார் சித்தர். அவர் மானூரை அடையும்போது நெல்லையப்பர் வழிமறித்து, சித்தரை சமாதானம் செய்து நெல்லைக்கு அழைத்தார். கருவூரார் சமாதானமாகி நெல்லை நோக்கி நடக்கலானார். அவர் எடுத்துவைத்த ஒவ்வொரு அடிக்கும் ஒரு பொற்காசு என்று கணக்கிட்டு இறைவன் வழங்கியதாக கூறப்படுகிறது.
அதனால் மகிழ்ந்த கருவூர் சித்தர், தனக்கு இறைவன் காட்சி கொடுத்த ஆவணி மூலத் திருநாளில் ஒவ்வொரு வருடமும் காட்சி தரும்படி கேட்டுக் கொண்டார்.
அதன்படி, நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத் திருவிழாவின்போது இறைவன், சித்தருக்கு காட்சி கொடுத்து சாப விமோசனம் பெறும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நெல்லையப்பர் தரிசனம் பெற்ற கரூவூர் சித்தர், தன் சாபத்தைத் திரும்ப பெற்றுக் கொண்ட இந்த நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் குடும்பத்துடன் பங்கேற்று, நெல்லையப்பர் - அம்பாள் மற்றும் கருவூர் சித்தரை தரிசனம் செய்வார்கள்.
கருவூர் பசுபதீஸ்வரர் கோவில் மற்றும் தஞ்சை பெரிய கோவிலில் கருவூர் சித்தருக்கு தனி சன்னதி உள்ளது. நெல்லையப்பர் கோவிலிலும் கருவூர் சித்தர் அருள்பாலிக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications