நாளை வெள்ளிக்கிழமையாச்சே! முடி வெட்டலாமா! ஷேவிங் செய்யலாமா? எந்த நாட்களில் நகம் வெட்டலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை வெள்ளிக்கிழமை! இந்த நாளில் முடியையும் நகத்தையும் வெட்டலாமா கூடாதா, ஷேவிங் செய்யலாமா வேண்டாமா என நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கும்.

நிறைய வீடுகளில் அவர்களின் மூதாதையர்கள் என்ன சொல்லிக் கொடுத்துள்ளார்களோ அதை பின்பற்றி சில காரியங்களை செய்வது வழக்கம். ஒரு சில செயல்களை இந்த நாளில் செய்யக் கூடாது என்றெல்லாம் இருக்கிறது.

On Fridays is it good to cut nails and hair

உதாரணமாக மாலை 6 மணிக்கு விளக்கு வைத்ததும் நகங்களை வெட்டக் கூடாது என்பார்கள். ஆனால் பார்லர்களில் எல்லாமே செய்கிறார்களே என நமக்கு சாதகமானதை எண்ணுகிறோம் . அது போல் வெள்ளிக்கிழமை அன்று காலை வேளையாக இருந்தாலும் நகங்களை வெட்டக் கூடாது என்கிறார்கள்.

இது சாஸ்திரப்படி எந்த அளவுக்கு உண்மை என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக எதை செய்யக் கூடாது என்கிறோமோ அதைத்தான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும். எதை எந்த நேரத்தில் செய்யக் கூடாது என்கிறோமோ அந்த நேரத்தில்தான் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எழும். எந்தெந்த நாளில் நகம் வெட்டவும் முடிவெட்டவும் , ஷேவிங் செய்யவும் சிறந்தது என பார்க்கலாம்.

அதாவது திங்கள்கிழமை சந்திரனுக்கு விசேஷமானது. சந்திரன் சந்ததியையும் ஆரோக்கியத்தையும் வளர்ப்பவர் என்பார்கள். இதனால் அன்றைய நாளில் முடி வெட்டுவதும் நகம் வெட்டுவதும் மன அழுத்தத்தை கொடுக்கும். குழந்தைகளுக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படும். அன்றைய தினம் நகத்தை வெட்டினால் நோய் ஏற்படும்.

சரி செவ்வாய்க்கிழமையை பார்த்தோமேயானால் அது அனுமனுடன் தொடர்புடையது. இந்த செவ்வாய் ஒரு கிரகமாகவும் போற்றப்படுவதால் இது கடுமையானதாக கருதப்படுகிறது. அன்றைய தினம் நகம் வெட்டுவது, முடியை வெட்டுவது போன்றவற்றை செய்தால் கோப குணம் அதிகரிக்கும். ஆயுளையும் குறைக்கும் என்கிறார்கள்.

முடி, நகத்தை வெட்டுவதற்கும் தாடியை ஷேவிங் செய்வதற்கும் புதன்கிழமைதான் உகந்ததாக சொல்லப்படுகிறது. அன்றைய தினம் இதை செய்தால் லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும் என்கிறார்கள். புதனின் அருள் கிடைக்கும் என்கிறார்கள்.

வியாழக்கிழமை விஷ்ணுவின் நாளாகும். அது போல் வியாழன் ஒரு கிரகமும் கூட! அந்த நாளில் முடியை வெட்டினாலும் நகத்தை வெட்டினாலும் லட்சுமி தேவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றுவிடுவார் என்கிறார்கள். அன்றைய தினம் நகங்களை வெட்டக் கூடாது.

வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்கு உகந்த நாள். இந்த நாளில் முடியையும், நகத்தையும் வெட்டுவது மங்களமானது. இவ்வாறு செய்தால் வாழ்க்கையில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். செல்வம், புகழ் இரண்டையும் பெறுவீர்கள். சனிக்கிழமை முடி, நகங்களை வெட்டுவதற்கு உகந்த நாள் கிடையாது. இந்த நாளில் முடி வெட்டினால் ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். ஷேவிங் செய்தால் பித்ரு தோஷத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

கடைசியாக ஞாயிற்றுக்கிழமைதான் உள்ளது. ஆனால் அந்த நாளும் முடி வெட்டுவது நல்லதல்ல என்கிறார்கள். அன்று முடியையும் நகத்தையும் வெட்டினால் செல்வமும் வெட்டப்படும் என்கிறார்கள். எனவே அன்றைய தினம் ஷேவிங்கும் செய்யக் கூடாது என்கிறார்கள்.

(இந்த தகவல்களை எல்லாம் ஆங்காங்கே படித்ததை எடுத்து கொடுத்துள்ளோம். இதை அப்படியே நம்ப வேண்டும் என்றில்லை! முடிவு எடுக்க வேண்டியது உங்கள் கையில்தான் இருக்கிறது. தேவைப்பட்டால் உங்கள் குடும்ப ஜோதிடரிடம் இது குறித்த சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம்.)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+