தங்கம் விற்கும் விலைக்கு.. பழனி கோவிலில் அதிசயத்த பாருங்க! அள்ள அள்ள தங்கம்..கொட்டி கிடக்கும் வெள்ளி
திண்டுக்கல்: புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்ற நிலையில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்று வருகிறது. அதில் இரண்டு கோடியே 87 லட்சத்து 51 ஆயிரத்து 237 ரூபாய் ரொக்க பணமும், 790 கிராம் தங்கம் 15 ஆயிரத்து 662 கிராம் வெள்ளி, 1154 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளன. இன்றும் உண்டியல் என்னும் பணி நடைபெறும் நிலையில் உண்டியல் காணிக்கை 5 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் முதன்மையான கோயில் பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் தான். இந்த கோயிலுக்கு தமிழகத்தை தாண்டி கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.
பழனிக்கு என்றே ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தரிசனம் செய்வார்கள். குறிப்பாக பொதுவாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் முருக பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

அந்த காலக்கட்டத்தில நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு பல நாட்கள் கூட்டம் அலைமோதும். அதேநேரம் மற்ற நேரங்களில் விசேஷ நாட்களில் மற்றும் வெள்ளி, செவ்வாய்கிழமைகளில், ஞாயிறுகளில் பழனி முருகன் கோயிலுக்கு கூட்டம் அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் புகழ்பெற்ற பங்குனி உத்திர நடைபெற்று முடிந்துள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 5ஆம் தேதி திரு ஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் துவங்கி திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான ஆறாம் நாள் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வடிவமும், அதனை தொடர்ந்து வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. பதினொன்றாம் தேதி ஏழாம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தீர்த்த காவடிகளை எடுத்து வந்து பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் பங்குனி உத்திர திருவிழா காரணமாக குவிந்த பக்தர்கள் கூட்டத்தில் உண்டியல் நிரம்பியது.
இதில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம், வெள்ளி நகைகள் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் பணத்தையும், நாணயங்களையும் எண்ணும் பணியினை கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக் கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து பிரித்து எண்ணப்பட்டது. நேற்றைய நாள் எண்ணிக்கை முடிவில் இரண்டு கோடியே 87 லட்சத்து 51 ஆயிரத்து 237 ரூபாய் ரொக்க பணம் கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தால் ஆன வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
அதன் மூலம், தங்கம் 790 கிராமும், வெள்ளி 15 ஆயிரத்து 662 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1151ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவ தானியங்கள், பட்டாடைகள், சேவல்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர் என பழனி நிர்வாகம் கூறியுள்ளது. இன்றும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடரும் நிலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை 5 கோடியையும், தங்கம் ஆயிரம் கிராமுக்கு மேலும் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications