காட்டுக்குள்ள நடமாடி… நாட்டுக்குள்ள முடிசூடி! களைகட்டிய தைப்பூசம்! காவடிகளை காண கண்கோடி வேண்டும்!
திண்டுக்கல்: பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கோலாகலம் நடைபெற்று வருகிறது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மலையடிவாரத்தில் கிரிவல பாதையில் காவடி சுமந்து ஆடிப்பாடி கொண்டாடி, முருகப் பெருமானை தரிசித்து வருகின்றனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூச திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசம் இன்றைய தினம் தேரோட்டம் மாலை நடைபெற உள்ளது. தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர்.
மலை அடிவாரத்தில் மயில் காவடி, இளநீர் காவடி, பால் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ள நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க யானை பாதை வழியாக மலை மீது அனுப்பி வைக்கப்பட்டு, சாமி தரிசனம் அளிக்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாக கீழே அனுப்பப்பட்டு வருகின்றனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் , மதுரை, விருதுநகர் எஸ்பிக்கள், ஐஜி தலைமையில் தென் மாவட்டங்களில் இருந்து 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தாலும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.மாலையில் நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தொடர்ந்து பழனி பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை 4.45 மணிக்கு ரத வீதிகளில் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவமும் 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது. தற்போது தைப்பூச திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.
இதனால் திண்டுக்கல் - பழனி, தாராபுரம் பழனி, உடுமலை சாலைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. மேலும் பக்தர்கள் யானை பாதை வழியாக மலை மேலே ஏறுவதற்கும் படிப்பாதை வழியாக கீழே இறங்குவதற்கும் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் மின் இழுவை ரயில் நிலையம், ரோப் கார் நிலையங்களை பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணித்து வருகின்றனர்.
அதிக கூட்டம் காரணமாக திருப்பதி மலை போல சுற்றுவட்ட முறையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் 4 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருக்கும் நிலையில் இன்றும், நாளையும் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பிலும், தன்னார்வலர்கள், தனியார் நிறுவன உரிமையாளர்கள் சார்பில் அன்னதானமானது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பழனி தேவஸ்தான நிர்வாகம் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், கழிப்பிடம், மின்சார வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டு இருக்கிறது. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து வரும் நிலையில் இதுவரை எந்தவிதமான சம்பாவிதங்களும் நடைபெறவில்லை என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications