பல்லி விழும் பலன்கள்: உதட்டில் விழுந்த பல்லி.. தோஷமா? யோகமா? பலன்களும் பரிகாரங்களும்
சென்னை: வீட்டில் எங்கும் நிறைந்திருக்கும் ஒரு ஜீவராசி பல்லிகளும் கரப்பான் பூச்சிகளும்தான். பலருக்கும் பல்லியைப் பார்த்தால் அருவெறுப்பு வரும். பல்லி சில நேரங்களில் நம் மேலே விழுந்து விடும். பல்லி வாய் பகுதியில் விழுந்தாலோ, உதட்டில் விழுந்தாலோ என்ன பலன் என்று பார்க்கலாம்.
பல்லி என்பது கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு அசுரனின் உடலாகும். அவனுடைய தலையை வெட்டியது விஷ்ணு பகவானாகும். பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை பல்லி சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பல்லியை மகாலட்சுமியின் அம்சமாகவும் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

தீபாவளியன்று வீட்டில் பல்லியை காணவில்லை என்றால் வெளிச்சங்களின் பண்டிகையான தீபாவளி முழுமை பெறுவதில்லை. தீபாவளி அன்று பல்லியை காண நேர்ந்தால் குடும்பத்திற்கு செல்வமும் வளமும் வந்து சேரும் என நம்பப்படுகிறது. அட்சய திருதியை நாளில் நாம் பல்லியை அவசியம் காண வேண்டும் என்று அர்த்தசாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
பல்லி சாஸ்திரத்தில் பல்லி விழும் பலன்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லி ஒருவரின் தலையில் விழுந்தால், வரப்போகும் கெட்ட நேரத்திற்கு அவர் தன்னை தானே தேற்றிக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு ஏற்படும். பெண்களுக்கு அவர்களின் தலையில் பல்லி விழுந்தால் அது மரண பயம் தரக்கூடிய விஷயம் நடக்கப்போகிறது என்று பொருள்
பல்லி தலையில் விழுவதற்கு பதிலாக முடியின் மீது விழுந்தால் ஏதோ வகையிலான நன்மை கிடைக்கும். முக பகுதியில் புருவம், கன்னத்தில் விழுந்தால் ஒருவரின் முகத்தில் பல்லி விழுந்தால், சீக்கிரமே உங்கள் வீட்டு கதவை உறவினர் தட்டலாம். உங்கள் புருவத்தின் மீது விழுந்தால்,
ராஜ பதவியில் இருப்பவரிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும்.
பல்லியானது பெண்களின் கன்னம் அல்லது கண்களில் விழுந்தால், ஏதோ ஒன்றுக்காக உங்களுக்கு தண்டனை கிடைக்கப்போகிறது என்பதை உணர்த்தும்.
பல்லியானது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மேல் உதடு, கீழ் உதடு, மூக்கு, வலது காதில் விழுந்தால் அதற்கேற்ப பலன் உண்டு. உங்களின் உதடு மீது பல்லி விழுந்தால், அது உங்களுக்கு சில அவமானங்களைக் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும். மேல் உதட்டின் மீது விழும் போது செல்வ இழப்பு ஏற்படும். அதுவே கீழ் உதடு என்றால் சொத்து பெருகும் வருமானம் அதிகரிக்கும் என்று அர்த்தமாகும். பல்லியானது உங்களின் மூக்கின் மீது விழுந்தால், நீங்கள் நோய்வாய் படலாம். கீழ் உதட்டில் பல்லி விழுந்தால் உங்களுக்காக புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
வலது காதின் மீது பல்லி விழுந்தால் நீண்ட ஆரோக்கியமான வாழ்வை நீங்கள் வாழ்வீர்கள் என அர்த்தமாகும். பல்லியானது உங்களின் வாயின் மீது விழுந்தால், ஏதோ ஒன்றை கண்டு நீங்கள் பயப்பட போகிறீர்கள் என அர்த்தமாகும். ஆனால் கழுத்தின் மீது விழுந்தால் உங்களின் விரோதிகள் அழிக்கப்படுவார்கள்.
பல்லியானது உங்களின் இடது கையின் மீது விழுந்தால், உங்களுக்கு பாலியல் ரீதியான சந்தோஷங்கள் கிடைக்கும். இதுவே வலது கை என்றால் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும் நோய்களால் பாதிப்பு ஏற்படும். பெண்களுக்கு அவர்களின் விரல்கள் மீது பல்லி விழுவதால் புதிய நகை, ஆடைகளை வாங்க வாய்ப்புள்ளது.
வலது மணிக்கட்டு, தொப்புள், தொடை, முட்டி, கணுக்கால், பிட்டம் வலது மணிக்கட்டில் விழுந்தால், ஏதோ வகையில் பிரச்சனை எழலாம். பல்லி விழும் இடம் உங்கள் தொப்புள் பகுதி என்றால் உங்களுக்கு மதிப்புமிக்க கற்களும், ரத்தினங்களும் கிடைக்கும்.
பல்லியானது பெண்களின் தொடை பகுதியில் விழுந்தால் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் வருத்தத்தை ஏற்படுத்துவீர்கள். முட்டி, கணுக்கால் மற்றும் பிட்டத்தின் மீது விழுந்தால் பொதுவான நன்மை ஏற்படும்.
ஒருவரின் பாதத்தில் பல்லி விழுந்தால் வருங்காலத்தில் பயணம் மேற்கொள்வீர்கள். பின்பக்கத்தில் பல்லி விழுந்தால் கஷ்டம் வரப்போகிறது. குடும்பத்தில் ஏதோ ஆபத்து வரப்போகிறது என்பதை குறிக்கிறது. பெண்களின் கால் விரல்கள் மீது பல்லி விழுந்தால் அவருக்கு ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக பல்லி சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications