பல்லி விழும் பலன்..முகத்தில் விழுந்திருச்சா பல்லி.. இந்த பரிகாரம் பண்ணுங்க.. ஆன்மீக டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்லியை பார்த்தாலே பலருக்கும் அலர்ஜி. கத்தி கூப்பாடு போடுவார்கள். சீரியலில் வில்லன்களை அடித்து துவம்சம் செய்யும் ஹீரோயின் கூட பல்லியை பார்த்தால் ஓடி ஒளிகிறார். மனிதர்கள் மீது பல்லி விழுந்தால் அது விழும் இடத்திற்கு ஏற்ப பலன் சொல்லுவார்கள். முகத்தில் பல்லி விழுந்தால் என்ன பாதிப்பு வரும் என்று பார்க்கலாம்.

கௌரி சாஸ்திரம்: பல்லிகள் நம்முடைய வீட்டில் நம்முடனேயே வசிக்கும் ஒரு உயிரினம். நமது வீட்டில் சில இடங்களில் பல்லி கத்தினால் நல்லது நடக்கும், சில இடங்களில் கத்தினால் தீயவை நடக்கும் என்று கூறுவார்கள். பண்டைய காலங்களில் பல்லியைப் பற்றி கௌளி சாஸ்திரம் என்று படித்திருக்கிறார்கள்.மனிதர்களுக்கு நல்ல சகுனங்களையும் கெட்ட சகுனங்களையும் பல்லிகள் மூலம் உணர்த்துவதற்கு கடவுள் அனுப்பிய ஒரு உயிரினம்தான் என்று புராணங்கள் சொல்கின்றன.

Palli Vilum Palan: Palli Mugathil Vilunthal enna palan parikaram Enna

செல்வம் தரும் பல்லி: வீட்டில் பல்லி இருப்பது மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை நாளில் வீட்டிற்குள் பல்லியை பார்த்தால் அந்த குடும்பத்திற்கு செல்வமும் வளமும் வந்து சேரும் என்கிற நம்பிக்கை அதிகம் உண்டு. இன்றைக்கும் அட்சய திருதியை நாட்களில் பல்லியை பார்த்தால் செல்வம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தலையில் பல்லி விழுந்தால்: பொதுவாகவே, தலையில் பல்லி விழுந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுவதுண்டு. தலையின் ஒவ்வொரு பகுதியில் விழுந்தாலும், ஒவ்வொரு பலன் இருக்கும். தலையில் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம், வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் நடக்கும். தலை முடியில் படும் படி பல்லி விழுந்தால் கவனம் தேவை. வாகன பயணங்களில் நிதானமாகவும், கவனமாகவும் வாகனத்தை ஓட்ட வேண்டும்.

தலையின் முன்பகுதியில் பல்லி விழுந்தால்: நிதி ரீதியான ஆதாயங்கள், லாபம் கிடைக்கும். தலையின் பின் பகுதியில் பல்லி விழுந்தால், தடைகள் ஏற்படும், எதையாவது செய்ய திட்டமிட்டிருந்தால் அது தாமதமாகும்.தலையின் நடுப்பகுதியில், உச்சி மண்டையில் பல்லி விழுந்தால், உடல் நல பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே உடல் ரீதியான பாதிப்புகள் இருந்தால், மருத்துவ ஆலோசனை மற்றும் தேவைப்பட்டால் மருத்துவ சோதனைகளை மேற்கொள்ளுங்கள்.

உச்சி வகிட்டில் பல்லி விழுந்தால்: பெண்களுக்கு, நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும் இடத்தில், பல்லி விழுந்தால், அல்லது பட்டால், விழுந்தவரின் அம்மா அல்லது சகோதரிக்கு ஏதேனும் பிரச்சனை உண்டாகும். ஆண்கள் அல்லது பெண்களில் பின் தலையில், முடியில் பல்லி விழுந்தால், விரும்பத்தகாத நிகழ்வு ஏற்படும். இது உடல் நலம் பாதிப்பையும் குறிக்கும். சொத்து இழக்க நேரிடும் அல்லது பணம் தொலைந்து போகலாம்.

பல்லி முகத்தில் விழுந்தால் பலன்: பல்லியானது தலையில் பட்டு, முகத்தில் விழுந்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். முகத்தில் நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி, வலது பக்கம் பல்லி விழுந்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் என்று சொல்வார்கள்.

கழுத்தில் பல்லி விழுந்தால்: தலையின் வலது பக்கத்தில், கழுத்துக்கு மேல் பல்லி விழுந்தால் அல்லது பட்டால், பல்லி விழுந்தவரின் மூத்த சகோதரர் அல்லது சகோதரிக்கு ஏதேனும் பிரச்சனை உண்டாகும். தலையின் இடது பக்கத்தில், கழுத்துக்கு மேல் பல்லி விழுந்தால் அல்லது பட்டால், பல்லி விழுந்தவரின் மூத்த சகோதரர் அல்லது சகோதரிக்கு ஏதேனும் பிரச்சனை உண்டாகும்.

கண்கள் மீது பல்லி விழுந்தால் பலன்: கண்ணின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் வரும். வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகம். மூக்கின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் கவலை அதிகரிக்கும். மூக்கின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய்கள் வரும். காதின் இடது பக்கம் பல்லி விழுவது லாபம். வலது காதின் மீது பல்லி விழுந்தால் ஆயுள் கூடும். ஒருவர் மீது அடிக்கடி பல்லி விழுந்தால், மகா மிருத்யுன்ஜ மந்திரத்தை தினசரி 9 முறை சொல்லலாம்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் உள்ள தங்க பல்லியை தரிசனம் செய்தால் பல்லியால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்பதும் நம்பிக்கையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+