Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிக்கடி கனவில் வரும் பாம்பு.. அடித்துக்கொன்றால் நல்லதா? கெட்டதா? .. கனவு சாஸ்திரம் சொல்வதென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டுக்கு வந்த பாம்பை விரட்டி கொல்வது போல கனவு வருதே இது ஏதாவது ஆபத்தின் அறிகுறியாக இருக்குமோ என்று பலரும் அஞ்சுகின்றனர். பாம்புகள் அடிக்கடி கனவில் வருவது நல்லதா, கெட்டதா கனவு சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

பாம்பு என்றால் பலருக்கும் பயம்தான். இந்தியாவில் நாகங்கள் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது. இந்திய மக்கள் காலம் காலமாக நாகங்களை வழிபடுகின்றனர். பெண்கள் அம்மன் ஆலயங்களுக்கு சென்று நாக வழிபாடு செய்து, புற்றுக்குப் பால் வார்த்து வருகின்றனர். நாகாத்தம்மன் கோவில்கள் அதிகம் உள்ளன. பாம்பு கனவுகள் வருவது பற்றி கனவு சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள பலன்களை பார்க்கலாம்.

Pambu Kanavugalum Palangalum: Pambai kondral enna palan spirituality news

பாம்பு கனவுகள்: சிலரது கனவில் பாம்புகள் அடிக்கடி தென்படும். பாம்புகள் அடிக்கடி கொத்தும். இதனால் ஏதேனும் கெடுதல் நடக்குமோ என்று பலரும் பயப்படுவார்கள். சிலருக்கு அடிக்கடி பாம்பு கனவில் வரும். இதன் மூலம் கடன் பிரச்சினை தீரும். தொல்லைகள், துன்பங்கள் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

பாம்பு கனவில் வந்து தரையில் மூன்று முறை கொத்தினால், ஒருவரைப் பீடித்திருந்த தோஷம், திருஷ்டி ஆகியவை விலகி ஐஸ்வர்யம் சேரும் என்பதை நாம் உணர வேண்டும். கனவில் பாம்பு வந்து நம்மைக் கடித்தால் நம்முடைய கஷ்டம் நம்மை விட்டு விலகும். குறிப்பாக தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

ஒரு சிலரது வீட்டிற்குள் பாம்புகள் வருவது போல அடிக்கடி கனவு வரும். அப்படி வரும் பாம்பினை அடித்துக்கொள்வது போல கனவு வந்தால் நமக்கு இருந்த சிக்கல்கள் நீங்கப்போகிறது. தடைகள் அகலப்போகிறது என்று அர்த்தமாகும். சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறப்போகிறது என்பதை உணர்த்துகிறது. பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கப்போகிறது என்று அர்த்தமாகும்.

ஒரு சில நேரங்களில் ஒற்றைப்பாம்பு கனவு அடிக்கடி வரும். அப்படி ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.
இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும் என்று சொல்கிறது கனவு சாஸ்திரம்.

பாம்பு நம்மை கடித்தது போல கனவு கண்டால் நமக்கு நிறைய பண வருமானம் வரப்போகிறது என்று அர்த்தமாகும். அதே நேரத்தில் பாம்பு நம்மை விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.

Pambu Kanavugalum Palangalum: Pambai kondral enna palan spirituality news

கனவில் பாம்பானது நம்முடைய காலை சுற்றி பின்னிக்கொள்வது போல வந்தால் நமக்கு ஏழரை சனி பிடிக்கப்போகிறது என்று உணரலாம். அதே நேரத்தில் பாம்பு கடித்து இரத்தம் வருவதாக கனவு கண்டால் ஏழரை சனி, அஷ்டமத்து சனி முடியப்போகிறது என்று அர்த்தமாகும். நம்முடைய கழுத்தில் பாம்பு மாலையாக விழுவது போல கனவு கண்டால் நாம் பணக்காரன் ஆகப்போகிறோம் என்று அர்த்தமாகும்.

உறங்கும் போது அதிகாலை நேரத்தில் நாம் நல்ல கனவு கண்டால் எழுந்து விட வேண்டும். மறுபடியும் உறங்கக் கூடாது. அதே நேரத்தில் கெட்ட கனவு கண்டால் கடவுளை தியானித்து விட்ட பிறகு உறங்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+