Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெய்வீக திருமணங்கள் நிகழும் பங்குனி உத்திரம்..முருகன் ஆலயங்களில் கோலாகலம். ஏப்.4ல் தேரோட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த விழா பங்குனி உத்திரம். பங்குனி மாதத்தில் பவுர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் இணைந்து வரும் நாள் பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா திருப்பரங்குன்றத்தில் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனியில் ஏப்ரல் 04ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

தமிழ் மாதங்களில் பன்னிரண்டாவது மாதமாக வருவது பங்குனி. அதே போல் நட்சத்திரங்களில் பன்னிரண்டாவதாக வருவது உத்திரம். அந்த நாளில் பவுர்ணமியும் இணைந்து வருவது சிறப்பாகும். தெய்வ திருமணங்கள் பலவும் நடைபெற்ற நாள் என்பதால் பங்குனி உத்திரத்தன்ற விரதம் இருந்து வழிபட்டால் நிச்சயம் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். அதனாலேயே இதை பங்குனி உத்திர விரதத்திற்கு திருமண விரதம் என்ற பெயரும் உண்டு

முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம். ஆனால் பங்குனி உத்திரமானது முருகப் பெருமானுடன் மட்டுமல்ல பல தெய்வங்களுடனும் தொடர்புடைய நாளாகும். பல தெய்வ திருமணங்கள் நடைபெற்றதும் இந்த நாளில் தான் என சொல்லப்படுகிறது.

திருப்பரங்குன்றனம்

திருப்பரங்குன்றனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா நாளைய தினம் தொடங்கி ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வரை 15 நாட்கள் நடைபெற உள்ளது. நாளைய தினம் காலை 8.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. 27ஆம் தேதி இரவு 7 மணியளவில் விநாயகர் சப்பரம் வலம் வருதல் நடக்கிறது திருவிழாவையொட்டி தினமும் காலை 10 மணியளவில் தங்கப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் வீதிகளில் வலம் வருதல் நடக்கிறது.

 சுவாமி அம்மன் உலா

சுவாமி அம்மன் உலா

28ஆம் தேதி இரவு 7 மணிக்கு தங்ககுதிரை வாகனத்திலும், 29ஆம் தேதி வெள்ளி பூத வாகனத்திலும், 30ஆம் தேதி அன்ன வாகனத்திலும், 31ஆம் தேதி சேஷ வாகனத்திலும், ஏப்ரல் 1ஆம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 2ஆம் தேதி தங்க மயில் வாகனத்திலும், 3ஆம் தேதி வெள்ளி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், 4ஆம் தேதி பச்சைக் குதிரை வாகனத்திலும், 5ஆம் தேதி தங்க குதிரை வாகனத்திலும், 6ஆம் தேதி தங்கமயில், குதிரை வாகனத்திலும், 7ஆம் தேதி பச்சை குதிரை வாகனத்திலும், 8ஆம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும்,9ஆம் தேதி திருத்தேரிலும், 10ஆம் தேதி தங்கமயில் வாகனத்திலும் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 திருக்கல்யாண தேரோட்டம்

திருக்கல்யாண தேரோட்டம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 1ஆம் தேதி சனிக்கிழமை கைப்பாரம், 5ஆம் தேதி பங்குனி உத்திரம் விழா நடைபெற உள்ளது, 6ஆம் தேதி சூரசம்கார லீலை, 7ஆம் தேதி பட்டாபிஷேகம், 8ஆம் தேதி பகல் 12.20 மணிக்கு மேல் 12.40 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. 9ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் கிரிவலப் பாதையில் மகா தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணைகமிஷனர் நா.சுரேஷ் தலைமையில் கோவில் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

பார் புகழும் பழனியில் பங்குனி தேரோட்டம்

பார் புகழும் பழனியில் பங்குனி தேரோட்டம்

பழனியில் பங்குனி உத்திர விழா 10 நாட்கள் விழாவாக நடத்தப்படும். இந்த ஆண்டு வரும் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. ஏப்ரல் 3ஆம் தேதி திருக்கல்யாணமும், ஏப்ரல் 4ஆம் தேரோட்டும் நடைபெற உள்ளது. பங்குனி உத்திர நாளில் பழனியில் நடக்கும் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 04 ம் தேதி பழனியில் வழக்கமாக நடக்கும் தங்கத் தேர் உற்சவம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கழுகாசலமூர்த்தி கோவில்

கழுகாசலமூர்த்தி கோவில்

தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா 27ஆம் தேதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 4ஆம் தேதி நடக்கிறது. ஏப்ரல் 6ஆம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+