இன்று பங்குனி உத்திரம்! வழிபாடு நடத்த நல்ல நேரம் எது? செய்யக் கூடியவை எவை?
சென்னை: பங்குனி உத்திரம் இன்று அனைத்து முருகன் கோயில்களிலும் கொண்டாடப்படும் நிலையில் இன்று வழிபாட்டுக்கு உகந்த நேரம், வழிபாடு செய்யும் முறை, சுவாமிக்கு படைக்க வேண்டிய நெய்வேத்தியம் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விரதநாட்களில் ஒன்றுதான் பங்குனி உத்திரம். சிவன் - பார்வதி, முருகன்- தெய்வானை, ராமர்- சீதை போன்ற தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்ற நாளாக பங்குனி உத்திரம் கருதப்படுகிறது. திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் மட்டுமின்றி திருமணமானவர்களும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய இந்த நாளில் விரதமிருக்க வேண்டும்.

அது போல் வேலை கிடைக்காதவர்களும் விரதமிருந்து வழிபட்டால் வேலை கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த வருடத்தின் பங்குனி உத்திரம், பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் 2025 இன்று பிற்பகல் 3 மணிக்கு முடிகிறது. முன்னதாகவே வீட்டை சுத்தப்படுத்தி பங்குனி உத்திரம் நாளில் விளக்கேற்றி பூஜை செய்யலாம்.
பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து பூஜை செய்து சிவபெருமான், முருகனை வழிபட்டால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், திருமண தடைகள், போன்றவை நீங்கி வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
இன்றைய நாளில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வழிபாடு செய்யலாம். பங்குனி உத்திரம் நாளில் வேண்டுதல் நிறைவேற முருகனை வேண்டிக் கொண்டு பால்குடம் எடுத்து வழிபாடு செய்யலாம். வீட்டில் முருகன் சிலை, வேல் இருந்தால் அவற்றிற்கு பால் அபிஷேகம் செய்யலாம்.
பங்குனி உத்திரத்தின் போது முருகனுக்கு நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல் அல்லது தேனும் திணை மாவும் சேர்த்து படைக்கலாம். திருமணத் தடை நீங்க, குழந்தை வரம் கிடைக்க, வேலை வாய்ப்பு கிடைக்க திருப்புகழை பாடி முருகனை வழிபடலாம்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications