கனவில் உடைந்து விழும் பற்கள்.. நொறுங்கும் கட்டிடம்.. கனவு உணர்த்தும் உண்மை என்ன? நல்லதா? கெட்டதா?
மதுரை: தூக்கத்தில் சிலருக்கு அடிக்கடி பற்கள் உடைவது போல கனவு வரும். சிலருக்கு வீடு, கட்டிடம் இடிவது போல கனவு வந்து பயமுறுத்தும். சிலருக்கு மரம் முறிந்து விழுவது போல கனவு வரும். ஏன் இந்த மாதிரியான கனவு வருகிறது என்ற குழப்பம் சிலருக்கு வரும். மனதிற்குள் எழும் பயம் இந்த மாதிரியான கனவுகளுக்கு காரணமாக அமைகிறது என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
ஆழ்மனதில் படிந்துள்ள எண்ணங்கள்தான் கனவுகளாக வெளிப்படுகிறது என்று சொல்வார்கள். நமக்கு வரும் கனவுகளை பற்றி நாம் ஆராய்ச்சி செய்தால் அதில் பல உண்மைகள் தெரியவரும். நம்முடைய பற்கள் விழுவதை போன்ற கனவு வந்தால் அது நமக்கு பல்வேறு விஷயங்களை சுட்டிக் காட்டுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பற்கள் உதிர்ந்து விழுவது போல கனவு கண்டால் அது நமக்கு நேரப்போகும் ஆபத்தை எச்சரிக்கிகிறது என்று அர்த்தமாம். நம்முடைய பெற்றோர், உறவினர்களின் பற்கள் விழுவதைப்போல கனவு வந்தால் அவர்களின் உடல் நலத்தை பற்றிய கவலையால் அவர்களுக்கு பற்கள் விழுவது போலவும் அதனால் அவர்களுக்கு வரப்போகும் துன்பத்தை கனவுகள் உணர்த்துவதாகவும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
உங்கள் நண்பரின் பற்கள் விழுவது போல கனவு கண்டால் அந்த நபர் உங்களை விட்டு பிரியப்போகிறார். உங்களுக்கும் அவருக்கும் ஏதோ பெரிய சண்டை நேரப்போகிறது என்று அர்த்தமாகும். ரத்தம் இல்லாமல் பற்கள் உடைந்து விழுந்தால் அது தோல்வியை உணர்த்துகிறது. பண நெருக்கடி, கடன் பிரச்சினையில் சிக்கியிருந்தால் உங்களுக்கு பற்கள் விழுவது போல கனவு வருமாம். தோல்வி பயம், வேலையிழப்பு, குடும்பத்தில் பிரச்சினை இருந்தாலும் பற்கள் விழுவது போல கனவு வருமாம். மன அழுத்தம் இருந்தாலோ, உடல் நலத்தில் வேறு பிரச்சினை இருந்தாலோ பற்கள் விழுவது போல கனவு வருமாம்.
சிலருக்கு வீடு கட்டுவது போல கனவு வரும். சிலருக்கு கட்டிடம், வீடு உடைந்து விழுவது போல கனவு வரும். அதற்கான அர்த்தமும் கனவு சாஸ்திரம் என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளது. புதிதாக வீடு வாங்குவது போல கனவு வந்தால் சுப காரியம் நடைபெறுவதை உணர்த்துகிறது. தோரணங்கள் கட்டிய வீடு கனவில் வந்தால் நல்ல செய்தி தேடி வரப்போகிறது என்று அர்த்தம். அதே நேரத்தில் பாழடைந்த வீடு கனவில் வந்தாலே, இடிந்த வீடு கனவில் வந்தாலோ, வீடு இடிந்து விழுவது போல கனவு கண்டாலோ ஏதோ குழப்பம், வாழ்க்கையில் துன்பம் வரப்போகிறது என்பதை உணர்த்துகிறதாம். நீங்கள் புதிய வீடு கட்டுவது போல கனவு கண்டால் சோதனைகள் வந்தாலும் அதில் இருந்து மீண்டு விடுவீர்கள் என்பதை உணர்த்துகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications