பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்.. 18 படி கொழுக்கட்டை படையல்
சிவகங்கை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இன்று சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கற்பக விநாயகரை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாளை 19ஆம் தேதி கற்பக விநாயகருக்கு 18 படி கொழுக்கட்டை படையலிட்டு வழிபட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். கற்பக விநாயகர் கோயிலில் கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 2ம் திருநாள் முதல் 8ம் திருநாள் வரை தினந்தோறும் காலையில் வெள்ளி கேடகத்திலும், இரவு மூஷிக, சிம்மம், பூத, கமல, ரிஷப, மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

ஆறாம் திருநாளான 15ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் கோயிலின் வடக்கு கோபுரம் அருகே கற்பக விநாயகர் எழுந்தருளி திருவீதி உலாவின் போது அசுரனை வதம் செய்யும் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது. புராண நிகழ்வாக இந்த கஜமுகாசூரசம்ஹாரம் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
சிங்கம், புலி,காளை, மயில்,பாம்பு என பல வாகனங்களை தெய்வங்கள் வைத்திருக்க சாதாரண மூஞ்சூருவை வாகனமாக ஏற்றுக்கொண்டது பற்றி புராண கதை ஒன்று உள்ளது.
மாகத முனிவருக்கும் விபூதி என்ற அசுரப்பெண்ணிற்கும் பிறந்த அசுரன் கஜமுகன். இவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து எந்த ஆயுதங்களாலும் அழியாத வரம் பெற்றான். வரம் பெற்ற மமதையில் இந்திரன் முதலான தேவர்களுக்கு இடர் விளைவிக்க, அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவனை கொல்வதற்காக இறைவன், ஆவணி மாதம் அமாவாசை கழிந்த நான்காம் நாள் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை யானை முத்தோடும், மனித உடலோடும் தோற்றுவித்தார். பிறகு அசுரனை வதம் செய்யும்படி அனுப்பி வைத்தார்.
சிவ-சக்தியின் வேண்டுதலினால் விநாயகர் தன் பூதப்படைகள் சூழ கஜமுகனின் மதங்கபுரத்தை முற்றுகையிட்டார். போர் மூண்டது. அவன் விட்ட பாணங்களை எல்லாம் விநாயகர் தன் கையில் உள்ள உலக்கையினால் தடுத்து, அதனைக்கொண்டே அவனை அடித்தார். கஜமுகன் மயங்கி விழுந்தான். ஆனால் இறக்கவில்லை. அவன் பெற்றவரம் நினைவுக்கு வரவே, விநாயகர் தம் கொம்புகளில் ஒன்றை ஒடித்து அக்கொம்பினால் அசுரனைக் கொன்றார். உடனே அசுரன் ஒரு பெருச்சாளி உருவம் தாங்கி விநாயகரை எதிர்த்துப் போரிட, விநாயகர் பெருச்சாளியை வென்று அதனைத் தன் வாகனமாக ஆக்கிக் கொண்டார்.
உடனே தேவர்களும் முனிவர்களும் மற்றும் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பெரும் துன்பங்களை அகலச் செய்த விநாயகப் பெருமானை சதுர்த்தி தினத்தன்று வழிபட்டு கஜமுகாசுரனுக்குத் தாங்கள் செய்யும் மரியாதைகளாக தலையில் குட்டிக் கொள்ளுதல், தோப்புக்கரணம் போடுதல் முதலிய கடமைகளைத் செய்யத் தொடங்கினார்கள். இந்த நிகழ்வை உணர்த்தும் வகையில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் இன்றைக்கும் கஜமுகாசூர வதம் நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் 6ஆம் திருநாளன்று கஜமுகாசூரசம்ஹாரம் 15ஆம் தேதி நடைபெற்றது.
9ஆம் திருநாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. பிள்ளையார்பட்டியில் காலை முதலே குவிந்திருந்த பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 4.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை வருடம் ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று இரவு உற்சவர் யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.
பத்தாம் திருநாளான நாளை 19ஆம் தேதி காலையில் கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு 18 படியில் ராட்சத கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு படையலிடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனையடுத்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications