புரட்டாசி மாதம்.. திவ்ய தேச சுற்றுலா.. பெருமாள் கோவில்களை தரிசிக்க ஆசையா? உடனே ரிசர்வ் பண்ணுங்க
சென்னை: புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவில்களுக்கு செல்ல பக்தர்கள் விரும்புவார்கள். சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சையில் உள்ள திவ்யதேசம் பெருமாள் கோயில்களின் ஒருநாள் சுற்றுலாவை அறிமுகம் செய்கிறது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களுக்கு எதிரான அரசு என்பதை உடைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா, மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு என திமுக அரசு ஆன்மீக அரசாகவே மாறி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரமாவது கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தி சாதனை படைத்துள்ளது இந்து சமய அறநிலையத்துறை.

இந்த நிலையில் புரட்டாசி மாதத்தில் திவ்ய தேசங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னையில் திவ்ய தேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம் 1ல் சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பெசன்ட் நகர் அஷ்டலெஷ்மி கோயில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோயில், சிங்கபெருமாள் கோயில், பாடலாத்ரி நரசிம்மர் கோயில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும். .
சென்னையில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம் 2 ல், சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோயில் , திருமுல்லைவாயில் பொன்சாமி பெருமாள் கோயில், திருவள்ளூர் வைத்திய வீர ராகவ பெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.
மதுரை மாவட்டத்தில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவில் மதுரை - அழகர்கோவில் சாலையில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு மதுரை - 2 வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து, அழகர் கோவில் கள்ளழகர் கோயில், ஒத்தகடை ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள் கோயில், திருமோகூர் காளமேக பெருமாள் கோயில், திருகோஷ்டியூர் சவும்ய நாராயண பெருமாள் கோயில், மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று மதுரை ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தை மாலை வந்தடையும்.
திருச்சி மாவட்டத்தில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவில் திருச்சி ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து, உறையூர் அழகிய மணவாள பெருமாள் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில், உத்தமர் கோவில் புருஷோத்தம பெருமாள் கோயில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசல பெருமாள் கோயில், தான்தோன்றி மலை கல்யாண வெங்கடராம பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று மாலை 5 மணிக்கு திருச்சி ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தை வந்தடையும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications