பூர்வீக சொத்தில் சுபம்.. 2025ல் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்குது.. கல்யாண யோகமும் வருது
சென்னை: அடுத்த சில நாட்களில் 2025ம் வருடம் பிறக்கப்போகிறது.. சனி மற்றும் குருவிற்கு உகந்த வருடத்திலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு உரிய வருடத்திற்கு நகர்வதால், ஏராளமான மாற்றங்கள் நடக்க போகின்றன.. அதிலும், சொந்த வீடு வாங்குவது, திருமணம் யோகம் கைகூடிவருவது என பல்வேறு திருப்பங்கள் நடக்க உள்ளதாக தெரிகிறது. அந்தவகையில், எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது? என்பதை இங்கு பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு கூடிய சீக்கிரம் நல்ல நேரம் வரப்போகிறது.. புதிதாக பிறக்க போகும் ஆண்டின் முற்பகுதியில் சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும், வருடத்தின் பிற்பகுதியில் வீடு மனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாம்.. சிலர் பழைய வீட்டை புதுப்பிக்க கூடும்.. தாய்க்கு மருத்துவ செலவுகள், தாய் வழி உறவில் மன சங்கடங்கள் ஏற்பட்டாலும், தந்தை வழியில் சில ஆதாயங்கள் உண்டு என்று கணித்து சொல்கிறார்கள் ஜோதிடர்கள் .

கடன் பிரச்சனை: அதேபோல, ரிஷப ராசிக்காரர்களுக்கும் கடன் பிரச்சனையெல்லாம் தீர போகிறது.. வருடத்தின் பிற்பகுதியில் பொருளாதார நிலை உச்சம் பெற போகிறது.. தந்தை வழி அல்லது பூர்வீக சொத்துக்களில் இருந்து, வில்லங்க பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, அனைத்துமே சாதகமாக முடியும்.. உங்களுடைய கடன் தீருவதுடன், நீங்கள் கொடுத்த கடனும் உங்களை வந்தடையும்.. குழந்தை இல்லாத பெண்களுக்கு மகப்பேறு வாய்ப்பு உள்ளது..
மிதுன ராசிக்காரர்கள், வருடத்தின் துவக்கம் முதல் செப்டம்பர் வரை தடுமாற்றம் சிறிது இருக்கலாம்.. ஆனால், நிதானமாக செயல்பட்டால் செப்டம்பருக்கு பிறகு வெற்றிகளும், அதிர்ஷ்டமும் வரிசையில் வரவுள்ளன. பொருளாதார நிலை உயர்வதுடன், உத்தியோகத்திலும் உயர்வு நிச்சயம் கிடைக்கும் என்கிறார்கள்.
திருமண வாய்ப்பு: அதேபோல, இந்த வருடம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு திருமண யோகம் அடிக்க வாய்ப்புள்ளது... குறிப்பாக கடக ராசிக்காரர்களுக்கு வரும் ஜுன், ஆகஸ்ட் மாதங்களில் திருமண யோகத்திற்கான வாய்ப்புள்ளதாம்.. குரு காதல் அல்லது அதற்கும் நெருக்கமான பந்தங்களாக இருக்கலாம்.. அதேபோல, ரிஷப ராசிக்காரர்களுக்கு, மே, ஆகஸ்ட் மாதத்தில் திருமண யோகம் வருகிறது. சுக்கிரனும், குருவும் காதலுக்கு சாதகமான கிரகங்களாக இருப்பதால், வரும் வருடம் இல்லறத்தில் கட்டாயம் நுழையக்கூடும்.
கும்ப ராசிக்காரர்களுக்கும் இதுவரை திருமண முயற்சியிலிருந்த தடைகளும் விலகிவிடும். வரும் வருடம் திருமண யோகம் கைகூடுகிறது.. குறிப்பாக ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரை இந்த யோகம் கணிக்கப்பட்டுள்ளது.
விருச்சிக ராசிக்காரர்கள்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு, ஜூலை முதல் அக்டோபர் மாதத்தில் திருமண யோகம் அடிக்கலாம் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்... அதேபோல, மீன ராசிக்கார்களுக்கும் ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை திருமண யோகம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், மீன ராசிக்காரர்கள் சற்று கவனத்துடன் திருமண முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications