இன்று காலை 10 மணிக்கு ரெடியா இருங்க! ஒரு நொடி தாமதித்தாலும் போச்சு! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதிக்கு அக்டோபர் மாதம் செல்லும் திட்டம் இருக்கிறதா அப்படியென்றால் இன்று காலை 10 மணிக்கு தயாராக இருக்குமாறு தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெங்கடாஜலபதியை கண் குளிர பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

இந்தியாவின் பணக்கார கடவுள் ஏழுமலையான் கோவில். தினசரியும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

tirupati spirtuality tirumala

கலி காலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.

திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை உண்டியல் வருமானமாக கிடைக்கிறது. மேலும் வைர, தங்க, வெள்ளி நகைகளும் காணிக்கையாக கிடைக்கின்றன. பல பக்தர்கள் தங்களின் சொத்துக்களையும் திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்து விடுகின்றனர்.

இந்த கோயிலில் தினமும் சிறப்பு தரிசனத்திற்காக டிக்கெட்டுகள் குவிந்து வருகிறது. வெளி மாவட்டம், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கோடை விடுமுறையையொட்டி திருமலையில் கடந்த சில தினங்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

ஒரு நாள் முழுவதும் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் 30 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 18ஆம் தேதி காலை 10 மணி முதல் 20 ஆம் தேதி காலை 10 மணி வரை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் சுப்ரபாதம்,அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு முடிந்தது.

அன்றைய தினமே மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஜூலை 22ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதே சேவைகளுக்கு நேரடியாக பங்கேற்காமல் சுவாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் 22 ஆம் தேதி மாலை 3 மணிக்கு டிக்கெட் வெளியிடப்பட்டது.

அக்டோபர் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் ஜூலை 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. அது போல் வாணி அறக்கட்டளைக்கு ரூ 10 ஆயிரம் நன்கொடை செலுத்தி விஐபி தரிசன டிக்கெட்டுகள் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியானது. மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான டிக்கெட்டுகள் 23ம் தேதி மாலை 3 மணிக்கும் வெளியானது.

இந்த நிலையில் அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசன ரூ.300 டிக்கெட்டுகள் ஜூலை 24-ம்தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்படுகிறது. திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் முன்பதிவு 24ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். எனவே பக்தர்கள் தங்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகள், அறைகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை 3 மாதங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டியது அவசியமானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+