சின்ன பணம்.. பெரிய லாபம்! மாதம் ரூ.520 இருந்தால் போதும்.. "இதை" செய்தால் 4 மடங்கு லாபம் கொட்டும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலீட்டை தொடங்க வேண்டும் என்றால் பெரிய தொகை தேவை என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. ஆனால், செல்வத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது முதலீட்டு தொகை அல்ல, தொடர்ந்து முதலீடு செய்யும் பழக்கம் தான். மாதம் வெறும் ரூ.520 மட்டுமே ஒதுக்க முடிந்தாலும், SIP எனப்படும் தொடர் முதலீடு மூலம் பெரும் செல்வத்தை சேர்க்க முடியும் என நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

அப்படி முதலீட்டில் இருக்கும் குழப்பமான SIP. இதை கேட்டவுடன் பலரும் இது ஏதோ முதலீட்டில் பெரிய சிக்கலான விஷயம் என நினைத்து கொள்கிறார்கள். ஆனால், அது அப்படி இல்லை.. SIP என்றால் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான். அதாவது ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை தொடர்ந்து முதலீடு செய்யும் முறையாகும். சம்பளதாரர்கள், முதல் முறையாக முதலீடு செய்பவர்கள் மற்றும் நீண்டகால செல்வத்தை உருவாக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கும்.

saving personal finance

ரூ.520 போதும்!

மாதம் ரூ.520 மட்டும் சிப் செய்து கோடீஸ்வரராக மாற முடியாது தான். இருப்பினும், இந்த சின்ன தொகையை கூட நீண்ட காலம் தொடர்ச்சியாக முதலீடு செய்யும்போது, அதன் கூட்டுவட்டியே அசாதாரண வளர்ச்சியை கொடுக்கும். ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைக்கும் என கணக்கிட்டால் கூட, 5 ஆண்டுகள் மாதம் ரூ.520 முதலீடு செய்யும்போது நமக்கு கணிசமான லாபம் கிடைக்கும்.

அதாவது 5 ஆண்டுகள் தொடர்ந்து ரூ.520 முதலீடு செய்யும்போது நமக்கு கையில் ரூ.31,200 கிடைக்கும். இந்த முதலீடு சுமார் ரூ.42,800 ஆக வளர வாய்ப்புள்ளது. அதேபோல் 10 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால் மொத்த முதலீடு ரூ.62,400ஆக இருக்கும். இது சுமார் ரூ.1.20 லட்சமாக உயரலாம். 20 ஆண்டுகள் தொடர்ந்து மாதம் ரூ.520 சிப் செய்தால் மொத்த முதலீடு ரூ.1.24 லட்சம் மட்டுமே இருக்கும். ஆனால் கூட்டுவட்டி காரணமாக மொத்தம் நமக்கு கிடைக்கும் தொகை சுமார் ரூ.5.19 லட்சமாக உயரும். அதாவது நீங்கள் முதலீடு செய்த தொகையை விட கிட்டத்தட்ட 4 மடங்கு அதிக பணம் உங்களுக்கு கிடைக்கும்.

கூட்டு வட்டி

இதுதான் Compounding எனப்படும் கூட்டு வட்டியின் மேஜிக். முதலீட்டில் அதிக லாபத்தை தருவது இந்த கூட்டுவட்டி தான். முதலீட்டில் கிடைக்கும் வருமானமும் மீண்டும் முதலீட்டுடன் சேர்ந்து வளர்வதால், காலப்போக்கில் முதலீட்டின் மதிப்பு வேகமாக அதிகரிக்கும். அதனால் தான் முதலீட்டை முடிந்தவரை இளம் வயதிலேயே தொடங்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

முதலீடு போதுமா?

அப்போ மாதம் ரூ.520 சிப் செய்தால் போதுமா என்று நீங்கள் கேட்கலாம்.. இது நல்ல தொடக்கம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், இதுவே போதுமா என்றால் நிச்சயம் இல்லை.. பெரிய முதலீட்டு நிதியை உருவாக்க வேண்டும் என்றால் வருமானம் அதிகரிக்கும் போதெல்லாம் சிப் தொகையையும் அதிகரிக்க வேண்டும். இதை ஸ்டெப்-அப் சிப் (Step-Up SIP) அல்லது டாப்-அப் சிப் (Top-Up SIP) என சொல்வார்கள். அதாவது ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர சிப் தொகையை நீங்கல் 10% அல்லது 15% சதவீதம் உயர்த்திக் கொள்ளலாம்.

என்ன செய்யலாம்?

உதாரணமாக, முதல் ஆண்டு ரூ.520 முதலீடு செய்தால், அடுத்த ஆண்டு அதை ரூ.570 அல்லது ரூ.600ஆக உயர்த்தலாம். அதற்கு அடுத்தாண்டு அதை மேலும் உயர்த்திக் கொண்டே போகலாம். இதன் மூலம் நீண்டகால நோக்கில் நமக்கு மிக பெரிய நிதி பலன் கிடைக்கும்! னவே, எவ்வளவ முடியுமோ அவ்வளவு இளம் வயதில் முதலீட்டை தொடங்குங்கள். தொகை சிறியதாக இருந்தாலும், தொடர்ந்து முதலீடு செய்வதும், நீண்ட காலம் தொடர்ந்து முதலீடு செய்யும்போது அது நமது இலக்குகளை எளிதாக அடைய உதவும்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+