சபரிமலையில் புதிய நவக்கிரக கோயில் பிரதிஷ்டை.. இன்று மாலை நடை திறப்பு.. தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி
சென்னை: புதிய நவக்கிரக கோயில் பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படவுள்ளது. சபரிமலை கோயிலில் ஜூலை 13இல் தந்திரிகள் தலைமையில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. சபரிமலையில் 3 நாட்கள் நடைபெறும் பூஜையையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கான சிறப்பு அறிவிப்பினை தேவஸ்தானம் போர்டு அறிவித்திருக்கிறது.
கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது.. இந்த கோயிலுக்கு உலகம் முழுவதிலுமிருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக, கார்த்திகை, சித்திரை விசு, மாதாந்திர பூஜை உள்ளிட்ட நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

அப்போது கோயிலில் நடக்கும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
மாளிகப்புரம் அம்மன்
இந்த சபரிமலை ஐயப்பன் கோவில் அருகிலேயே தேவபிரசன்னத்தில் கூறப்பட்டதன் அடிப்படையில் மாளிகப்புரத்தம்மன் கோவிலில் புதிய நவக்கிரக கோவில் கட்டப்பட்டது.
மாளிகப்புரம் கோவிலில் ஏற்கனவே நவகிரக சன்னதி இருந்தாலும், தற்போது அவற்றை புனரமைத்துள்ளனர்.. தற்போது புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பூஜைகளும் நடத்த உள்ளனர்..
திருமண தடை, குழந்தை பாக்கியம், தீராத நோய்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்த அம்மனை பக்தர்கள் நாடி வருவார்கள்.. இங்குள்ள நவகிரக சன்னதியிலும் தங்களது கோரிக்கையை வைத்து பிரார்த்தித்துக் கொள்வார்கள்.
புதிய நவக்கிரக கோயில்
இந்நிலையில், மாளிகப்புரத்தம்மன் கோவிலில் புதிய நவக்கிரக கோவில் கட்டப்பட்டதால், இதன் பிரதிஷ்டை நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற உள்ளது. இதற்காக இன்று மாலை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.
நாளைய தினம் கோவிலில் சுத்தி கலச பூஜை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் காலை 11 மணிக்கு நவக்கிரக கோவில் பிரதிஷ்டை நடக்கிறது. பிறகு மாலை நடை திறக்கப்பட்டு, விசேஷ பூஜைகள் நடந்து முடிந்ததுமே, அன்றைய தினம் இரவு 10 மணிக்கு மீண்டும் நடை அடைக்கப்படுகிறது..
நாளை காலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், சந்தன அபிஷேகம், லட்சார்ச்சனை போன்றவை நடைபெற உள்ளன..
பிறகு மாலையில் புஷ்பாபிஷேகம், படி பூஜையும், அத்தாழ பூஜையும் நடத்தப்படும்.. ஹரிவராசனம் பாடி இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
தேவஸ்தானம் அதிரடி
ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது.. மறுநாள் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. இந்த அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகளை நேரில் காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்..
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் தரப்பில் சொல்லும்போது, "தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம்.
நவகிரக பிரதிஷ்டைக்கான பூஜைகள் ஜூலை 11ம் தேதி துவங்கி தொடர்ந்து 3 நாட்கள் நடத்தப்பட உள்ளது. இந்த மூன்று நாட்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications