மாசி மாத பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு.. தேவசம்போர்டு புது உத்தரவு
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக இன்று திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு கட்டாயம் என்றும், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு கவுண்ட்டர்கள் செயல்படும் என்றும் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக சபரிமலை சீசனான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருவது வழக்கம்.

அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்கிய மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பிறகு 2 நாள் இடைவெளிக்கு பிறகு மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. கடந்த மாதம் 20 ஆம் தேதியுடன் மகர விளக்கு பூஜை, மகர ஜோதி தரிசனத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து நடை சாத்தப்பட்டது.
கடந்த சபரிமலை சீசனின் போது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் வழக்கமாக இருந்தபோதும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டது. அப்படி வசதிகள் கூட இல்லாமல் மக்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்தனர். இந்த முறை 50 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை 5.30 மணியளவில் கோவில் நடை திறக்கப்படும். அன்று பூஜைகள் ஏதும் நடத்தப்படாது. மீண்டும் கோவில் நடை அடைக்கப்பட்டு, பிப்ரவரி 14 ம் தேதி காலை நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 5 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நாட்களில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பிப்ரவரி 18 ஆம் தேதி வரை 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
14ஆம் தேதி காலை 5 மணிக்கு நெய் அபிஷேகத்தில் தொடங்கி இரவு வரை பல்வேறு பூஜைகள் நடத்தப்படும். 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை தினமும் இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். பக்தர்கள் முன்பதிவு செய்ய வசதியாக நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு வரும் 18 ஆம் தேதி இரவு ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோயில் நடை சாத்தப்படவுள்ளது.
பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு கட்டாயம் என்றும், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு கவுண்ட்டர்கள் செயல்படும் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications