Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மண்டல பூஜைக்கு தயாராகும் சபரிமலை.. குவியும் பக்தர்கள்.. தங்க அங்கியில் ஜொலிக்கப்போகும் ஐயப்பன்

Subscribe to Oneindia Tamil

சபரிமலை: ஐயப்பன் கோவிலில் நாளை மறுநாள் மண்டல பூஜை நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். 70 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. நாளைய தினம் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

அலைமோதும் கூட்டம்: சபரிமலையில் மாத பிறப்பு நாளில் 5 நாட்களுக்கு சாமி தரிசனத்திற்கு நடை திறந்தாலும் கார்த்திகை, மார்கழி, தை மாதத்தில் நடைபெறும் மண்டலபூஜை,மகரவிளக்கு பூஜை காலங்களில் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு கடந்த நவம்பர் 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.

Sabarimala Mandala Pooja 27th December Ayyappan will shine Thanga Angi on Tomorrow

ஆன்லைன் தரிசன முன்பதிவு: கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறந்த நாள் முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து கொண்டுள்ளனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

கட்டுக்கடங்காத கூட்டம்: இதில் ஒரு சில நாட்களில் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் மேல் இருந்தது. இதுபோக நிலக்கல் உள்பட பல இடங்களில் உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டதால் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. இதனால் கேரளா மாநில உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

ஐயப்பனை காண குவியும் பக்தர்கள்: முதியோர், பெண்களுக்கு தனி வரிசை ஏற்படத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே நடப்பு சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நாளை மறுநாள் நடக்கிறது. இன்றைய தினம் 70 ஆயிரம் பக்தர்களுக்கும், நாளைய தினம் 64 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தங்க அங்கி ஊர்வலம்: திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973-ம் ஆண்டு சபரிமலைக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி இன்று மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வந்த தங்க அங்கி ஊர்வலம் கடந்த 23ஆம் தேதி தங்க அங்கி சபரிமலைக்கு புறப்பட்டது.
இந்த ஊர்வலம் நாளை பிற்பகல் பம்பை கணபதி கோவில் வந்தடைகிறது. அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு வருவார்கள்.

ஜொலிக்கும் ஐயப்பன்: மாலை 5.30 மணிக்கு சன்னிதானம் வந்தடையும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். அப்போது 18ஆம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு ராஜீவரரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும். பின்னர் 18ஆம் படி வழியாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்பட்டு மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் நடைபெறும் வழக்கமான பூஜைகளுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பக்தர்கள படியேற தடை: தங்க அங்கியை இன்று சன்னிதானத்துக்கு கொண்டு வருவதையொட்டி நாளை பிற்பகலில் 18ஆம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை. நாளை மறுநாள் மண்டல பூஜையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். 11 மணிக்கு களபாபிஷேகம் முடிந்ததும் தங்கி அங்கி அலங்காரத்துடன் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல சிறப்பு பூஜை நடைபெறும்.

கோவில் நடை அடைப்பு: பகல் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பிறகு மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். பூஜைகளுக்கு பின் இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு மண்டல பூஜை நிறைவு பெறும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை மீண்டும் 30ஆம் தேதி திறக்கப்படும். மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 15ஆம் தேதி நடைபெறும்.

பக்தர்கள் எண்ணிக்கை: இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த், "மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து உடனடி தரிசன முன்பதிவு எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி முதல் உடனடி தரிசன முன்பதிவை 15 ஆயிரமாக அதிகரிப்பது தொடர்பாக அரசுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

70 ஆயிரம் பக்தர்கள்: நடப்பு சீசனில் 23ஆம் தேதி வரை 25.69 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை 26ஆம் தேதி ஆன்லைன் முன்பதிவு 64 ஆயிரமாகவும், 27ஆம் தேதி 70 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

தங்க அங்கி: மண்டல பூஜையையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி 26ஆம் தேதி மதியம் பம்பை வந்து சேரும். தொடர்ந்து ஓய்வுக்கு பிறகு தங்க அங்கி மாலை 5.15 மணிக்கு சரம் குத்தி வந்தடையும். அங்கு தங்க அங்கி ஊர்வலத்திற்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். 27ஆம் தேதி காலை 10.30-11.30 இடையே மண்டல சிறப்பு பூஜை தந்திரி தலைமையில் நடைபெறும்.

அப்பம், அரவணை: அப்பம், அரவணை வினியோக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பிரச்சினை காரணமாக மராட்டியத்தில் இருந்து வரவேண்டிய 32 டன் சர்க்கரை ஒரு நாள் தாமதமாக வந்தது. இதனால் அப்பம், அரவணை வினியோகத்தில் சிறிய தாமதம் ஏற்பட்டது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில், உடனடியாக 500 டன் சர்க்கரை வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+