காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா! ஜில்ஜில் கிளைமேட்..சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்! திணறும் சன்னிதானம்
திருவனந்தபுரம்: சபரிமலையில் கடந்த வாரத்திற்கு முன்பு வரை கனமழை காரணமாக பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்து இருந்த நிலையில் தற்போது மிதமான வெயிலுடன் இதமான காலநிலை நிலவுவதால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த நிலையில் இந்தாண்டு கடந்த நவம்பர் 16ஆம் தேதியான மண்டல பூஜை தொடங்கியது.

இதற்காக நவம்பர் 15ஆம் தேதி மாலையே சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றினர். தொடர்ந்து 18-ஆம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது.
தொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து தந்திரி பிரம்மாதத்தன் ஐயப்பன் சிலைக்கு நெய்யபிஷேகம் செய்து மண்டல பூஜையை தொடங்கி வைத்தார். இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். மேலும் ஏற்கனவே மாலை அணிந்தவர்கள் ஐயப்பனை காண சபரிமலைக்கு படை எடுத்துள்ளனர்.
தொடர்ந்து அன்று முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு நெய், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து பிற்பகல் ஒரு மணிக்கு நடை சாற்றப்பட்டு பின்னர் மூன்று மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
பின்னர் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலையில் பின்னர் ஹரிவராசனம் இசைக்கப்பட்டு ஐயன் ஐயப்பன் துயில் செல்கிறார். இந்த நிலையில் கடந்த வாரத்திற்கு முன்பு வரை சபரிமலை உள்ளிட்ட கேரளா முழுவதும் கனமழை பெய்தது. இதனால் கட்டும் குளிர் நிலவிய நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இந்நிலையில் தற்போது மழை குறைந்து மிதமான வெயிலும் மிதமான காலநிலை நிலவுவதால் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பம்பை, சன்னிதானம், படிப்பாதை, மர கூட்டம், நீலிமலை கடந்து சரங்குத்தி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதி அனைத்தும் மலைப் பாதை என்பதால், பக்தர்கள் களைப்படைய வாய்ப்புள்ளது. காரணமாக பக்தர்கள் ஆங்காங்கு அமர்ந்து இளைப்பாற இருக்கை வசதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் மூலிகை குடிநீர், பிஸ்கட் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
இதமான காலநிலை நிலவுவதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் இறுதியில் தரிசனம் செய்ய தேவஸ்தானத்தின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய வேண்டும் என தேவஸ்தானத்தின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு தரிசனம் செய்ய இரண்டு மணி நேரம் காத்திருந்த நிலையில் தற்போது மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை தரிசனத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications