இதற்குத் தான் இத்தனை நாள் ஏக்கம்.. சபரிமலையில் நாளை மண்டல பூஜை! இன்று சன்னிதானம் வரும் தங்க அங்கி!
திருவனந்தபுரம்: புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை நடைபெற இருக்கும் நிலையில் இன்று தங்க அங்கி சன்னிதானத்திற்கு வர இருக்கிறது. இதை அடுத்து சன்னிதானத்தில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த நிலையில் இந்தாண்டு கடந்த நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கியது.

இதற்காக நவம்பர் 15ஆம் தேதி மாலையே சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றினர். தொடர்ந்து 18-ஆம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவில்:
தொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து தந்திரி பிரம்மாதத்தன் ஐயப்பன் சிலைக்கு நெய்யபிஷேகம் செய்து மண்டல பூஜையை தொடங்கி வைத்தார். இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். மேலும் ஏற்கனவே மாலை அணிந்தவர்கள் ஐயப்பனை காண சபரிமலைக்கு படை எடுத்துள்ளனர்.
பெருவழிப்பாதை பயணம்:
இந்த நிலையில் சபரிமலை மண்டல பூஜைக்கு வரும் பக்தர்களுக்காக இடுக்கி மாவட்டத்தில் ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இடுக்கி மாவட்டம் சத்திரம், புல்மேடு வழியாக காட்டுப் பாதையில் சபரிமலைக்கு நடை பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே மாலை அணிந்தவர்கள் மட்டும் இல்லாது, புதிதாக மாலை அணிந்த கன்னி சாமிகளும் ஐயப்பனை தரிசிக்க இந்த ஆண்டு கூடுதலாக படை எடுத்து வருகின்றனர்.
நாளை மண்டல பூஜை:
இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நாளை நடைபெற இருக்கிறது. இதற்காக தங்க அங்கி பம்பை வந்தடைந்துள்ள நிலையில் இன்று மாலை சன்னிதானம் கொண்டு செல்லப்படுகிறது. மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. தற்போது வரை சுமார் 30 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு இதே நாளை ஒப்பிடும் போது இது நான்கரை லட்சம் அதிகம் என்கின்றனர் அதிகாரிகள்.
பக்தர்கள் எண்ணிக்கை:
கடந்த 23ஆம் தேதி பக்தர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. அன்று மட்டும் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 621 பேர் தரிசனம் செய்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது மண்டல பூஜையில் அதிகபட்ச எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மண்டல பூஜை நாளை நடைபெற இருக்கும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. தங்க அங்கி இன்று பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்படுவதால் மதியம் முதல் மாலை வரை சபரிமலை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படவில்லை.
மண்டல பூஜை:
இந்த ஆண்டு மண்டல பூஜை 26 ஆம் தேதி முடிவடைந்து அன்று இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும். பின்பு மகர பூஜைக்காக 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 14ஆம் தேதி மகர விளக்கு விழா நடைபெற இருக்கிறது. ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் அங்கி பம்பைக்கு இன்று ஒன்றரை மணிக்கு வந்து சேர்ந்து மாலை 3 மணி அளவில் சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படும் நிலையில் மதியம் ஒரு மணி முதல் நடை அடைக்கப்படுகிறது. பின்பு மூன்று மணிக்கு நடை திறக்கப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு ஐந்து மணிக்கு திறக்கப்படுகிறது. தீபாராதனை வழிபாடு மற்றும் நடைபெறும் நிலையில் மாலை 6:40 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து தங்க அங்கி அலங்காரத்தில் ஐயப்பனை தரிசிக்கலாம் என திருப்பிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications