சனி பெயர்ச்சி: திருநள்ளாறு சனி பகவான் கோவிலுக்கு போறீங்களா?.. ஆன்லைன் டிக்கெட் புக்கிங் ஆரம்பம்
காரைக்கால்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழா 20ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பக்தர்களின் தரிசனத்துக்காக ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்று முதல் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள், திருநள்ளாறு கோவில் நகரத்தில் உடனடி டிக்கெட் 12 கவுண்டரில் நேரடியாக டிக்கெட் பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருநள்ளாறு: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ளே திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. திருநள்ளாறு என்றாலே நம் நினைவுக்கு வருவது சனீஸ்வர பகவான் தான் இங்கு அமர்ந்து இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி. சனியைப் போல கொடுப்பவரும் இல்லை. சனியை போல கெடுப்பவரும் இல்லை. திரு நளச்சக்கரவர்த்தியின் துயரை ஆற்றியதால் திருநள்ளாறு என பெயர் பெற்றது.

அனுக்கிரக சனிபகவான்: நளமகாராஜனை, சனிபகவானின் பீடிப்பிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால் நள்ளாறு என அழைக்கப்படுகிறது. சுயம்புவாக தர்ப்பைவனத்தில் தோன்றியதால் ஈசன் தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார். தேவார மூவரான அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர்களால் பாடல் பெற்ற தலம் இது.
இங்கு சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சனி பெயர்ச்சி: இந்த ஆலயத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் வரும் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
வாக்கிய பஞ்சாங்கப்படி சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வரும் 20ஆம் தேதி மாலை 5.20 மணிக்கு இடம் பெயர்கிறார். இந்த சனி பெயர்ச்சி விழா அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தருவார்கள். சனி பெயர்ச்சிக்கு முன்னதாகவே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவதால் கோவில் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நாள் முழுவதும் கோவில் திறப்பு: சனி பெயர்ச்சி விழா குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் 20 ஆம் தேதி அன்று கோயில் நடை சாத்தப்படாது. அன்று இரவு முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலவச பேருந்துகள்: சனி பெயர்ச்சி விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நகர் முழுவதும் 160க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. அன்று கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக காரைக்கால் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் இருந்து மாவட்ட முழுவதும் 26 இலவச பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
ஆன்லைன் புக்கிங்: சனி பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் அருகே பிரம்மாண்ட ஷெட் அமைக்கப்பட்டுள்ளது என கூறினார். சனி பெயர்ச்சி நாளன்று பக்தர்கள் தரிசனம் செய்ய ஆன்லைன் டிக்கெட்டுகள் முதல் முன்பதிவு இன்று டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ளது.
எள் தீபம் ஏற்றுவோம்: தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அருளும் சனிபகவான், ஈசனின் கட்டளைப்படி இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு நல்வாழ்வினை அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். சனிபகவானால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வணங்கினால் நல்ல பலன்களைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. எள் தீபம் ஏற்றி சனிபகவானை மனதார வேண்டினால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பதால் சனிபகவானை வணங்கி விட்டு எள் தீபம் ஏற்றி செல்கின்றனர்.
அருள் தரும் சனிபகவான்: திருநள்ளாறில் உள்ள சனீஸ்வர பகவானை, சனிப்பெயர்ச்சி அன்று மட்டுமின்றி, ஒரு மண்டலம் அதாவது 48 நாட்களுக்கும் பக்தர்கள் வழிபடலாம். இந்து சமய சமயங்களில் மண்டல பூஜை பற்றிய பல குறிப்புகள் உள்ளன, அது காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஸ்ரீ சனீஸ்வர பகவான் இந்த 48 நாட்கள் மண்டலத்தில் நிபந்தனையின்றி சரணடையும் பக்தர்களுக்கு காமதேனுவைப் போல அருள்பாலிக்கிறார்.
48 நாட்கள் மண்டல பூஜை: 20.12.2023 அன்று நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு நடைபெறும் மகாபிஷேகம் முடிந்த பிறகும் அடுத்த 48 நாட்களுக்கு ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு மண்டல பூஜை தொடரும். ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள், ஹோமங்கள், யாகங்கள் மற்றும் பூஜைகள் திருக்கோவில் வளாகத்தில் வெகுசிறப்பாக நிகழும் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தரிசன டிக்கெட்டுகள்: இலவச தரிசனம், ரூ. 300/- டிக்கெட் தரிசனம், ரூ. 600/- டிக்கெட் தரிசனம், ரூ. 1000/- டிக்கெட் தரிசனம் ஆகிய தரிசனங்களுக்கு தனித்தனியாக வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் https://thirunallarutemple.org/sanipayarchi/ எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள், திருநள்ளாறு கோவில் நகரத்தில் உடனடி டிக்கெட் 12 கவுண்டரில் நேரடியாக டிக்கெட் பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications