அதிர்ஷ்டம் தரும் செங்காலி மாலை.. குபீரென அதிகரித்த வியாபாரம்.. எந்த ராசிக்காரர்கள் அணிந்தால் யோகம்?
சென்னை: கருங்காலி மாலைகளை தற்போது சினிமா பிரபலங்கள் மிகப்பெரிய தொழில் அதிபர்கள் அணியத் தொடங்கியுள்ளனர். அதே போல செங்காலி மாலைகளின் விற்பனையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முருகப்பெருமான், பைரவருக்கு உகந்த மாலை என்று கூறி செங்காலி மாலைகளை விற்பனை செய்து வருகின்றனர். செங்காலி மாலைக்கு என்ன சக்தி உள்ளது எந்த ராசிக்காரர்கள் அணியலாம் என்று பார்க்கலாம்.
கருங்காலி மரத்திற்கு மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறன் அதிகம், இந்த மரத்துண்டுகளை கோவில் கும்பாபிஷேகத்தின் போது கலசத்தை நிலை நிறுத்த பயன்படுத்துவார்கள். அது பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றலை ஈர்த்து கருவறையில் உள்ள விக்ரகத்தின் அடியில் சில தகடுகள் பதிக்கப்பட்டு இருக்கும் அந்த சக்தியுடன் கலந்து நமக்கு அபரிதமான சக்தியை வழங்கும் இது பழங்கால கோயில்களில் உணரலாம்.

கருங்காலி மரம் மருத்துவ குணம் கொண்டது. அந்த மரத்தின் வேர், பட்டை முதலியவை மருத்துவ குணம் கொண்டவை. கருங்காலி மரத்தின் பட்டையை அரைத்துக் கொடுத்தால் ரத்தம் தொடர்பான நோய்களிலிருந்து விரைவில் நலம் பெறலாம் என சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. வயிற்றுவலி, நீரிழிவு, உடற்சோர்வு உள்ளவர்களுக்கு கருங்காலி வேர் குடிநீர் அருமருந்தாக உள்ளது.
செங்காலி சிறப்பு வாய்ந்தது. அதிர்ஷ்டத்தை ஈர்க்கக் கூடிய சக்தி செங்காலிக்கு உள்ளது. செங்காலி மரத்தை வீட்டில் வளர்த்தால் கெட்ட சக்திகள் அண்டாது. தெய்வாம்சம் நிறைந்திருக்கும். கோவில் கட்டுமானப்பணிக்கு செங்காலி மரத்தை பயன்படுத்துவார்கள்.
கருங்காலியின் குணங்கள் போல செங்காலி மரத்திற்கும் உள்ளது. கூடுதலாக தெய்வீக சக்தி கொண்டது. தேக்கு மரத்தை விட பலமானது. அதிக சக்தியும் கொண்டது. கருங்காலி கண் திருஷ்டியில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும் என்றால் செங்காலி என்பது பிரபஞ்ச சக்தியில் இருந்து நல்ல சக்திகளை அதிர்ஷ்டத்தை ஈர்த்து நமக்கு கொடுக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். செங்காலி மாலைகள் அணிபவர்களுக்கு தெய்வாம்சம் நிறைந்திருக்கும்.
முன்பெல்லாம் செங்காலியில் கட்டில், தொட்டில் செய்வார்கள். செங்காலி மரம் இருந்தால் தோஷங்கள் எதுவும் தாக்காது என்று சொல்வார்கள். செங்காலியை உபயோகித்தால் முகம் பொலிவடையும்.
செங்காலி மரத்தில் தற்போது கட்டில், தொட்டில் செய்ய முடியாவிட்டாலும் மாலை அணியலாம் என்கின்றனர். தெய்வாம்சம் நிறைந்த செங்காலி மாலை அணிவதால் உயிர் பாதுகாப்பு இருக்கும் என்கின்றனர். அந்த காலத்தில் அரசர்கள் செங்காலி மாலை அணிவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
செங்காலி மாலையை நாம் நம்முடன் வைத்திருந்தால் பூரண சக்தியும் நமக்கும் நமது தலைமுறைக்கும் பாதுகாப்பாக இருக்குமாம். அதில் உள்ள மின்காந்த சக்தி மந்திரத்தை உட்கிரகித்துக் கொள்கிறதாம்.
செங்காலி மாலையை கார்களில் வைத்துக்கொள்ளலாம். விபத்துகள் நேரிடுவதில் இருந்து பாதுகாப்பு ஏற்படுமாம். காரியசித்தியாக செங்காலி மாலை அணியலாம். வேலை கிடைக்காதவர்கள், சுப காரிய தடை இருப்பவர்கள் செங்காலி மாலை அணியலாம்.
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்கள், கிருத்திகை, விசாகம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், திருவாதிரை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் செங்காலி மாலை, வளையல், பிரேஸ்லெட் அணியலாம்.
அசைவம் சாப்பிடும் போது செங்காலி மாலையை கழற்றி வைத்து விட்டு பின்னர் அணியலாம். செங்காலி மாலை அணியாவிட்டாலும் செங்காலி பிரேஸ்லெட் அணியலாம் ஆண்கள் வலது கைகளிலும் பெண்கள் இடது கைகளிலும் அணியலாம்.












Click it and Unblock the Notifications