கோயில்களில் நவக்கிரகங்களை வலம் வரவே கூடாது! ஏன் தெரியுமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
சென்னை: தோஷம், பாவ பரிகாரங்களுக்கு எப்படி தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும் என்பது தெரியுமா? அது போல் நவக்கிரகங்களை சுற்றவே கூடாது அது ஏன் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். எந்தெந்த தெய்வத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும்
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

தோஷம் நீங்க - ஏற்ற வேண்டிய தீபங்கள்!
1. ராகு தோஷம் - 21 தீபங்கள்
2. சனி தோஷம் - 9 தீபங்கள்
3. குரு தோஷம் - 33 தீபங்கள்
4. துர்க்கைக்கு - 9 தீபங்கள்
5. ஈஸ்வரனுக்கு - 11 தீபங்கள்
6. திருமண தோஷம் - 21 தீபங்கள்
7. புத்திர தோஷம் - 51 தீபங்கள்
8. சர்ப்ப தோஷம் - 48 தீபங்கள்
9. காலசர்ப்ப தோஷம்- 21 தீபங்கள்
10. களத்திர தோஷம் -108 தீபங்கள்
வலம் வருதல்
1. விநாயகர் - 1 அல்லது 3 முறை
2. கதிரவன் (சூரியன்) - 2 முறை
3. சிவபெருமான் - 3, 5, 7 முறை (ஒற்றைப்படை)
4. முருகன் - 3 முறை
5. தட்சினா மூர்த்தி - 3 முறை
6. சோமாஸ் சுந்தர் - 3 முறை
7. அம்பாள் - 4, 6, 8 முறை (இரட்டைப்படை)
8. விஷ்ணு - 4 முறை
9. இலக்குமி - 4 முறை
10. அரசமரம் - 7 முறை
11. அனுமான் - 11 அல்லது 16 முறை
12. நவக்கிரகம் - நவகிரகங்கள் நம்மை சுற்றுகின்றன அதனால் நாம் அவர்களை சுற்ற தேவையில்லை
13 பிரார்த்தனை - 108 முறை
* மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது.
* அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி போன்ற நாட்களில் வில்வ இலை பறிக்கக் கூடாது. இதற்கு முந்தைய நாள் மாலையிலேயே இதைப் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக் கூடாது.
...
* கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக் கூடாது.
* விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக் கூடாது.
* கோவிலுக்குள் தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது.
* கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது. கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக் கூடாது.
வணங்கும் விதி
பிரம்மா , விஷ்ணு , சிவன் இம்மூவரை வணங்கும் போது , சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும். மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகூப்பி வணங்கினால் போதும். குருவை வணங்கும் போது , நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும்.
அரசரையும் , தகப்பனாரையும் வணங்கும் போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்கவேண்டும்.
பிராமணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும்.
தன்னுடைய தாயை வணங்கும் போது வயிற்றில் கைவைத்து வணங்க வேண்டும்.
மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
பூமியில் நெடுஞசாண் கிடையாக வணங்க வேண்டும்.
ஆனால் பெண்கள் , மாதா , பிதா , குரு , தெய்வம் மற்றும் கணவனை வணங்கும் போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்களுடைய ஸ்தனங்கள் பூமியில் படக் கூடாது. ஓம் நமச்சிவாய !!!!! இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications