இன்று ஆடிப்பூரம் 2025! அம்பாளுக்கு எத்தனை வளையல்களை மாலையாக சாத்தலாம்? என்னென்ன நிறங்கள்?
சென்னை: ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு எத்தனை எண்ணிக்கை கொண்ட வளையல்களை மாலையாக அணிவிக்கலாம் என்பதை பார்க்கலாம். ஆடிப்பூரத்தன்று அம்பாளுக்கு வளையல் சாத்தினால் நல்லது. திருமண தடை நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்குரிய மாதமாகும். அந்த மாதத்தில் நிறைய விழாக்கள் நடைபெறும். ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு உள்ளிட்டவை ஆகும்.

இதில் ஆடிப்பூரம் என்பது சிறப்பு வாய்ந்தது. ஆடிப்பூரம் என்பது ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் அம்மன் வழிபாட்டு நாளாகும். இந்த நாளில், அம்பாளுக்கு வளையல் அணிவித்து வழிபடுவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, அம்மன் கோவில்களில் இந்த நாளில் வளையல் காப்பு உற்சவம் நடைபெறும். அன்னைக்கு வளையல் மாலை அணிவித்து, பூஜைகள் செய்து வழிபடுவது அம்மனின் அருளைப் பெற உதவும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் இன்று ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. அம்மனுக்கு இன்று நிறைய வளையல்களை மாலையாக சேர்த்து வைத்து பின்னர் அதை பெண்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் மாலை அணிவிப்பதும் நல்லது, அந்த மாலையில் உள்ள வளையல்களை பிரசாதமாக வாங்கிக் கொள்வதும் சிறப்பு.
அம்மனுக்கு எத்தனை வளையல்கள் இருக்க வேண்டும் என்பதற்கு எந்தவிதமான வரையறையும் இல்லை. பொதுவாக, அம்மனின் திருவுருவச்சிலைக்கு ஏற்றார்போல், சிலர் 11, 21, 108 என அவரவர் விருப்பப்படி வளையல்களைக் கொண்டு மாலை கோர்த்து சாற்றுவார்கள். சிலர், ஒரு ஜோடி வளையல்கள் அல்லது அவரவர் கைக்கு அடங்கிய வளையல்களையும் சாற்றுவார்கள்.
அம்மனுக்கு வளையல் மாலை சாற்றுவது என்பது ஒரு பாரம்பரியமான வழிபாடு முறையாகும். சிலர் பல வண்ணங்களில் வளையல்களைத் தேர்வு செய்து, அவற்றை ஒன்றாகக் கோர்த்து மாலையாக அம்மனுக்கு அணிவிப்பார்கள்.
வளையல் மாலை மட்டுமின்றி, அம்பிகைக்குப் பிடித்தமான மலர்கள், பழங்கள், பொங்கல் போன்றவற்றை வைத்து வழிபடுவதும் நல்லது.
அம்பாள் வளைக்காப்பை ,
ஆடிப்பூரத்தன்று, அம்பிகைக்கு வளையல் மாலை அணிவித்து, மனதார வழிபடுவதன் மூலம் திருமணத்தடை நீங்கும், குழந்தைப் பேறு கிடைக்கும், குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
அது போல் இந்த வளையல்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், ஆரஞ்ச் உள்ளிட்ட நிறங்களில் இருக்கலாம். கண்களுக்கு பளிச்சென இருக்கும் நிறங்களில் வளையல்களை வாங்கிக் கொள்ளலாம்.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
Vaikasi Visagam: வைகாசி விசாகம் 2026! திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications