வெள்ளித் தட்டில் குங்குமச்சிமிழ்.. வீட்டில் வெள்ளி நாணயம் இப்படி வைத்தாலே லட்சுமி கடாட்சம் பெருகும்
சென்னை: வீட்டின் நிதி நிலைமை சீராக வேண்டுமானால், அதற்குரிய சில சாஸ்திரங்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.. வறுமை நீங்கி, வீட்டில் செல்வம் பெருகவும், பாசிட்டிவ் எனர்ஜி பரவவும், வீட்டின் பூஜை அறை, பணம் சேமிக்கும் இடங்களில் வெள்ளிப்பொட்களை வைப்பது பலன் தரும் என்கிறார்கள். அந்தவகையில், பூஜை அறையில், பீரோவில், எப்படி வெள்ளியை வைக்கலாம்? பெண்கள் வெள்ளி மோதிரம் அணியலாமா? இதுகுறித்து சுருக்கமாக இப்போது பார்ப்போம்.
ஆன்மீகத்தில் வெள்ளிக்கு தனி முக்கியத்துவம் உண்டு.. மங்களகரமான பொருளாகவும் கருதப்படுகிறது. எனவேதான், மணமான பெண்ணுக்கு கூஜா, செம்பு, தட்டு, குங்குமச்சிமிழ், விளக்கு என அத்தனையும் வெள்ளியில் சீதனமாக தருகிறார்கள்.

பூஜைகள் வெள்ளி
பூஜைகளிலும், தட்டு, சூடதட்டு, சாம்பிராணி தட்டு, வெள்ளி விளக்கு, சந்தனக்கும்பா, குங்குமச்சிமிழ், வெள்ளியில் கடவுள் சிலைகளை வைத்திருப்பார்கள். கோவில்களிலும்கூட, இறைவனுக்கு வெள்ளி மூக்குத்தி, சூலாயுதம், வேல் போன்றவற்றை வெள்ளியிலேயே அலங்காரமாக செய்து வைத்திருப்பார்கள்.
உடலிலுள்ள கபம், நீர், தோஷத்தை சீராக வைத்திருப்பதால்தான், வெள்ளி ஆபரணங்களை பலரும் அணிகிறார்கள்.. அதுமட்டுமல்ல, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குளிர்ச்சி தரக்கூடிய உலோகம்தான் வெள்ளி.. அதனால்தான், பிறந்த குழந்தைகளுக்கு கிண்ணம் ஸ்பூன், தட்டு, கால் தண்டை, அரைஞாண் கயிறு இப்படி அனைத்தையுமே வெள்ளியில் அணிவிக்கிறார்கள்.
சந்திரனின் நிறமான கருதப்படும் வெள்ளி, சிவனின் கண்களிலிருந்து தோன்றியதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சந்திரனுடனும் சுக்கிரனுடனும் வெள்ளிக்கு நிறைய தொடர்ப் உள்ளதால், வீட்டில் வெள்ளியை வைத்திருப்பது நன்மையை தருவதாக நம்பப்படுகிறது. அந்தவகையில் எந்தெந்த வகைகளில் வெள்ளியை வீட்டில் வைத்திருக்கலாம் தெரியுமா?
வெள்ளி நாணயம்
எப்போதுமே பூஜைறையில், வெள்ளி நாணயம் ஒன்றை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டின் பொருளாதாரம் உயரும்.. நேர்மறையான ஆற்றல் அதிகமாகும்.. பணத்தை ஈர்க்கும் சக்தி வெள்ளிக்கு நிறையவே உண்டு என்பதால், வெள்ளி நாணயத்தை, பூஜையறையின் வடகிழக்கு மூலையில் வைப்பது சரியானது.
வெள்ளி நாணயத்தை தொழில் செய்யும் இடங்களில், அலுவலகங்களில் வைத்திருப்பது, நேர்மறை சக்திகள் ஈர்க்க உதவியாக இருக்கும்.
வெள்ளிப்பொருட்கள்
வெள்ளி நகைகளையும், வெள்ளி பொருட்களையும் எப்போதுமே வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்கலாம். அதேசமயம் சிவப்பு நிற துணியில் சுற்றி வைப்பது, மன அமைதியை தரும்.. வெள்ளியை சிவப்பு துணியில் கட்டி வீட்டில் மேற்கு திசையில் வைப்பதால் குடும்பம் வளர்ச்சி பெறும்.
செல்வம் மற்றும் லட்சுமி தேவியுடன் வெள்ளி தொடர்புடையது என்பதால், பூஜையறையில் கட்டாயம் வெள்ளி நாணயத்தை வைத்திருக்க வேண்டும்.. இதனால் பணக்கஷ்டமும் விலகி மகிழ்ச்சி பெருகும்.. சுக்கிரனும் சாந்தம் பெறுகிறார்..
வீட்டில் வெள்ளி நாணயம் வாங்கி வைக்க வேண்டும் என்று நினைத்தால், வெள்ளிக்கிழமை அன்று வாங்கி வைப்பது நல்ல பலன்களை கொடுக்கும்.. ஆனால், உபயோகிக்கும் முன்பு அந்த நாணயத்தை சுத்தம் செய்து, அதற்கு பிறகே வைக்க வேண்டும்,.. அப்போது வெள்ளி நாணயங்கள் மேல்நோக்கி இருக்கும்படி வைப்பது உயர்வை பெற்றுத்தரும்.
வெள்ளி குங்குமச்சிமிழ்
அதேபோல, வீட்டில் வெள்ளி குங்குமச்சிமிழை பூஜையறையில் வைப்பது போல, பீரோ மீதும் வைக்கலாம்.. வெள்ளி குங்குமச்சிமிழில் குங்குமத்தை போட்டு, பீரோவுக்கு மேலே வைத்தால், வீட்டில் பணம் தங்கும் என்பார்கள்.. யாராவது குங்குமச்சிமிழை பரிசாக தந்தால், அதனை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
எப்போதும் லட்சுமி மற்றும் விநாயகர் உருவங்கள் கொண்ட வெள்ளி நாணயங்களை வைத்திருப்பது சுக்கிரனை தரிசனம் செய்வதற்கு சமம் என்பார்கள்.. இதனால் இரு கடவுள்களின் ஆசி கிடைப்பதுடன், பணப் பிரச்சனைகளும் ஏற்படாது..
வெள்ளி மோதிரங்கள்
அதேபோல வெள்ளி மோதிரங்களை பெண்களும் அணியலாம்.. தங்கத்தைவிட வெள்ளி மோதிரம்தான் பெண்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்கிறார்கள்.. எப்போதும் வெள்ளி மோதிரத்தை நடு விரலில் பெண்கள் அணியவேண்டும். நடுவிரலிலும் அணிந்து கொள்ளலாம். ஆண்கள், வெள்ளி மோதிரத்தை ஆள்காட்டி விரலில் அணிய வேண்டும்.
வெள்ளி கொலுசு
பெண்களும் காலில் வெள்ளி கொலுசு அணிகிறார்கள்.. காலில் தங்கத்தில் அணியும்போது, உடலில் வாதம் அதிகமாகிவிடும். வாதம் அதிகரித்தால் உடல் எடை கூடிவிடும்.. இதனால் கால் வலி, மூட்டு வலி, முழங்கால் வலியில் கொண்டுபோய் விட்டுவிடும்.. உடலில் உஷ்ணத்தை தந்து, வாதத்தை சம நிலையில் வைக்கும் தன்மை வெள்ளிக்கு உண்டு என்பதால்தான் கொலுசு, மெட்டி போன்றவற்றை வெள்ளியில் அணிய சொல்கிறார்கள்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications