சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் நல்லெண்ணெய்,அரிசி வைத்து பூஜை..குறியீடு சொல்வதென்ன?
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் அடுத்தடுத்து உத்தரவுப்பொருள் மாற்றப்படுவதால் ஏதாவது பெரிய அளவில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் புதிதாக இரண்டு பொருட்களை வைத்து பூஜை செய்கிறார்கள். அந்த பொருட்களை வைத்து பூஜை செய்வதால் உணவுப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படுமா? அல்லது விலை ஏற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிவன்மலை ஆண்டவர் பக்தரின் கனவில் வந்து ஏதாவது ஒரு பொருளை வைத்து பூஜை செய்ய சொல்வார். அந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்து தனக்கு ஆண்டவரின் உத்தரவு கிடைத்துள்ளதாக சொல்வார். அவர் சொல்வது உண்மைதானா என்று பார்க்க சாமியின் முன்பாக பூ கட்டி போட்டு பார்ப்பார்கள். சாமி உத்தரவு கொடுத்தால் அந்த பொருளை கண்ணாடி பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள்.
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் பொருளை வைத்து சமூகத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படும். உணவுப்பொருட்களை வைத்தோ, மளிகை பொருட்களை வைத்தோ பூஜை செய்தால் விலை ஏற்றம் ஏற்படும். மஞ்சள் வைத்தும், பருத்தி வைத்தும் சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் வைத்து பூஜை செய்த போது அதிக விலை ஏற்றம் ஏற்பட்டது. நூல் விலை அதிகமாக உயர்ந்தது. மஞ்சள் விலை உயர்ந்த போது விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கடந்த காலங்களில் 3 மாதம், ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் உத்தரவுப்பெட்டியில் வைக்கப்படும் பொருட்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். இப்போது கடந்த சில மாதங்களாகவே உத்தரவுப்பெட்டியில் அடிக்கடி பொருட்கள் மாற்றப்படுகின்றன. பக்தர்களின் கனவில் வந்து உத்தரவிட்ட உடனேயே பெட்டியில் இருக்கும் பொருட்களை மாற்றிவிடுவார்கள்.

ஆண்டவன் உத்தரவு
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் எவ்வித பொருளுக்கும் கால நிர்ணயம் எதுவும் கிடையாது என, பக்தர்கள் மற்றும் கோவில் சார்பில் கூறுகின்றனர். கடந்த நவம்பர் மாதம் இளநீர் வைத்து பூஜை செய்யப்பட்டது. ஜனவரி மாதத்தில் நெற்கதிர்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. விவசாயம் செழித்து பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் வேலை வைத்து பூஜை செய்யப்பட்டது எதிரிகள் பிரச்சினை ஒழியும் என்று சொல்லப்பட்டது.

மகளிர் தினத்தில் மாங்கல்ய சரடு
கடந்த 8ஆம் தேதியன்று திருப்பூர் மாவட்டம் முத்தூர், வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த எஸ்.கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் உத்தரவான அகிலம் என்ற உலக உருண்டை, அத்திரி என்ற பசு சிலை, குதிரையை குறிக்கும் பொருள், 2 திருமாங்கல்ய சரடு ஆகியவை வைத்து பூஜிக்கப்பட்டது. உலக அளவில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் மகளிர் தினத்தில் மாங்கல்ய சரடு வைத்து பூஜை செய்யப்படுவதால் அதிக அளவில் திருமணங்கள் நிகழும் என்றும் முருகப்பெருமான் உணர்த்துவதாக சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.

நல்லெண்ணெய், அரிசி
இந்த நிலையில் இன்றைய தினம் ஈரோடு மாவட்டம் நம்பியூரைச் சேர்ந்த முத்துச்சாமி என்ற பக்தரின் கனவில் 7 கிலோ அரிசி, 5 லிட்டர் நல்லெண்ணெய் வைத்து பூஜை செய்ய சிவன்மலை ஆண்டவர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து உலக உருண்டை, மாங்கல்சரடு, போன்றவை அகற்றப்பட்டு நல்லெண்ணெய்,அரிசி வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் எள் விலை, நல்லெண்ணெய் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அரிசி உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் பக்தர்கள் ஒரு சிலர் கூறுகின்றனர். அதே நேரத்தில் ஒரு சிலரோ இந்த பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர்.

சுனாமி வந்தது எப்படி
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் துப்பாக்கித் தோட்டா வைத்து பூஜிக்கப்பட்ட போது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா, பாகிஸ்தானை வென்றது என்றும், மண் வைத்து பூஜிக்கப்பட்டபோது ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்து நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்ததாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறைக்கு போன சசிகலா
இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்பட்டபோது ஊழல் வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் அரிசியும், நல்லெண்ணெய்யும் வைத்து பூஜை செய்யச் சொல்லி சிவன்மலை ஆண்டவர் எதை உணர்த்துகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications