சூரிய கிரகணம்.. நீரில் இருக்கும் கரும்பாம்பு.. 2024ல் பல சம்பவங்களை செய்யுமாம்.. ஜோதிடர் கணிப்பு
சென்னை: கேது கிரஹஸ்த சூரிய கிரகணம் இன்று மகாளய அமாவாசை நாளில் நிகழ உள்ளது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் தோஷம் எதுவும் இல்லை. அதே நேரத்தில் ராகு உடன் சூரியன் இணைந்து 2024 ஆம் ஆண்டு நிகழ உள்ள சூரிய கிரகணம் மிகப்பெரிய சம்பவங்களை செய்யப்போவதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
ஓர் ஆண்டுக்கு இரண்டு சூரிய கிரகணங்களும் இரண்டு சந்திர கிரகணங்களும் நிகழ்வது வழக்கம். இது அறிவியல் ரீதியாக வானத்தில் நிகழும் அரிய நிகழ்வு என்றாலும் ஜோதிட ரீதியாக ராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களை விழுங்குவதாக புராண கதைகளில் கூறப்படுகின்றன.

சூரியன், சந்திரனை பழிவாங்க ராகுவும் கேதுவும் பிரம்மனை நினைத்து பல காலம் தவமிருந்து வரம் பெற்றனர். இவ்வரத்தின்படி ஒரு ஆண்டில் நான்கு முறை சூரிய சந்திரர்களின் பார்வை பூமியில் விழாது தடுக்கும் வரத்தை கொடுத்தார் எனவும் இதுவே கிரகணம் எனப்படுவதாகவும் புராண கதைகள் கூறுகின்றன.
சூரியன் கேது உடன் இணைந்து பயணிக்கும் போது கேது கிரஹஸ்தம் என்றும் சூரியன் ராகு உடன் பயணம் செய்யும் போது கேது கிரஹஸ்தம் என்றும் சொல்லப்படுகிறது. இன்றைய தினம் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் கேது கிரகஸ்த சூரிய கிரகணமாக சித்திரை நட்சத்திரத்தில் நிகழ்கிறது. மகாளய அமாவசை தினத்தில் நிகழும் இந்த அரிய சூரிய கிரகணம் இரவு 08.34 மணி முதல் இரவு 02.25 மணி வரைக்கும் சித்திரை நட்சத்திரத்தில் நிகழும் சூரிய கிரகணம் அமெரிக்கா, மெக்ஸிகோவில் தெரியும். இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது என்பதால் இங்கு எதுவும் தோஷம் கிடையாது.
15 நாட்களுக்குப் பிறகு ராகு உடன் சந்திரன் இணைந்து மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் நிகழப்போகும் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும். ஐப்பசி 10ஆம் தேதி அக்டோபர் 28ஆம் தேதி இரவு 1 மணிக்கு தொடங்கி 02.24 மணி வரைக்கும் சந்திர கிரகணம் நீடிக்க உள்ளதால் பல கோவில்கள் இரவு 7 மணிக்கே மூடப்பட்டு விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரேவதி, அஸ்வினி, பரணி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்களாக ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி பங்குனி மாதம் 26ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 9 மணி தொடங்கி இரவு 02.22 மணி வரை நிகழப்போகும் சூரிய கிரகணம் ராகு கிரஹஸ்த சூரிய கிரகணமாக நிகழ உள்ளது. ரேவதி நட்சத்திரத்தில் நிகழப்போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. மெக்ஸிகோ, வட அமெரிக்கா, கனடா, நார்வே, ஐஸ்லாந்து, பிரிட்டன், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் இந்த சூரிய கிரகணம் தெரியும். இந்த சூரிய கிரகணம் முழு சூரிய கிரகணம் ஆகும்.
மீன ராசியில் ராகு, சூரியன், சுக்கிரன், சந்திரன் கூட்டணியில் இந்த சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த முழு சூரிய கிரகணம் உலக நாடுகளில் பல சம்பவங்களை செய்யப்போவதாக கூறுகின்றனர் ஜோதிடர்கள். மணிகண்டன் பாரதிதாசன் என்ற ஜோதிடர் தனது முகநூல் பக்கத்தில் சூரிய கிரகணம் பற்றி கணித்து எழுதியுள்ளார். நீரில் இருக்கும் கரும்பாம்பு, நிகரற்ற பலமுள்ளவன். இந்த சூரிய கிரகணமே பயங்கரமா இருக்கே, அடுத்த ஆங்கில வருடம் ஏப்ரல் 8 தேதி வரும் சூரிய கிரகணம் நினைச்சா தான் ரொம்பவே பயமாக இருக்கிறது.
நான்கு கிரகங்களை பிடிக்கும் ராகுவின் பலம் உலகில் பல சம்பவங்களை செய்ய இருக்கிறது. உலகப்போருக்கான வாய்ப்பு அல்லது தொற்று நோய்க்கான வாய்ப்பு அல்லது BIO-WARக்கான வாய்ப்பு மிக அதிகம் என்பதே இதன் அறிகுறி. நீரில் இறங்கிய ராகு இஸ்லாம் நாடுகளை குறிவைத்திருக்கிறான். குரு வக்ரமாகி ராகுவை நோக்கி நகரும் இந்த காலம் சற்று பதட்டம் கொடுத்தாலும், பாரத நாட்டுக்கு பிரச்சனை இல்லை. அடுத்த ஆங்கில வருடமே, தன் சம்பவத்தை ராகு செய்வான்.

பல சித்தர்களின் ஜீவசமாதிகளின் அருட்கொடையால் பாரத தேசம் குரோதி வருடத்தில் நலம் பெறும். ராகு ரேவதி இரண்டாம் பாதம் முதல் - உத்திரட்டாதிக்கு (ஏப்ரல் 2024 to செப்டம்பர் 2024) செல்லும் காலம் வரை, நாம் அனைவரும் காலபைரவரை வணங்கி கூட்டு பிரார்த்தனை செய்வது நலம் தரும் என்று எழுதியுள்ளார் மணிகண்டன் பாரதிதாசன்.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தனுசு ராசியில் 6 கிரகங்கள் கூடியிருந்த போது சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்த சூரிய கிரகணம் உலக நாடுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரைக்கும் உலக நாடுகள் கொரோனா என்ற கொடிய வைரஸ் பிடியில் சிக்கியிருந்தன. படிப்படியாக இப்போதுதான் பல நாடுகளில் பொருளாதார நிலை மீண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் 2024ஆம் ஆண்டு நிகழப்போகும் சூரிய கிரகணம் பல சம்பவங்களை செய்யும் என்று கணித்துள்ளார் ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications