வெற்றிலை கற்பூரம் ஆரத்தி தட்டில் வைக்கணுமா? யாருக்கு ஆராத்தி எடுக்கலாம்? ஆரத்தி எடுப்பதன் அவசியம்?
சென்னை: ஆரத்தி எதற்காக, யாருக்காக எடுக்கப்படுகிறது? ஆரத்தியில் கரைக்கப்படும் பொருட்கள் என்னென்ன? அவைகளின் குணங்கள் என்னென்ன? ஆரத்தி எடுக்கும்போது வெற்றிலை கற்பூரம் வைக்க வேண்டுமா? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
ஆரத்தி எடுப்பது, ஒருவகை மருத்துவமாகும்.. ஆரத்தியிலுள்ள மஞ்சள், சிறந்த ஆண்டிபயாடிக்.. அதிலுள்ள வெற்றிலையும், சுண்ணாம்பும் மிகச்சிறந்த கிருமி நாசினியாகும்.. கற்பூரமும் பாசிட்டிவ் சக்தி தந்து, விஷ அணுக்களை அழிக்கக்கூடியது.

கிருமிநாசினி: இவைகளை எல்லாம் சேர்த்து கொளுத்தும்போது, வெற்றிலை, சுண்ணாம்புகளில் நெருப்பு படிந்து, அந்த புகையானது, அந்த பகுதி முழுவதும் பரவும்.. இதனால், காற்றிலுள்ள நச்சுக்கிருமிகள் அத்தனையும் அழிந்துவிடும். மஞ்சள், சுண்ணாம்பு, வெற்றிலை, கற்பூரம் இவை அனைத்தும் சேர்ந்து, கிருமிகளை அழித்து, அந்த பகுதியை சுத்தம் செய்கின்றன.
அதேபோல ஆன்மீகத்தில் ஆரத்திகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது.. கோவிலில் இறைவனுக்கும், வீடுகளில் மனிதர்களுக்கும் ஆரத்தி எடுப்பார்கள்.. இதில், கோயிலில், மஞ்சள் குங்குமத்தை சுத்தமான நீரில் கரைத்து 2 நெய்விளக்குகள் ஏற்றி இறைவனுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும். இந்த நீரை மனிதர்கள் காலடி படாத துளசிச்செடியில் ஊற்றிவிட வேண்டும். பெரும்பாலும், கண்திருஷ்டிகளுக்கு பரிகாரமாக வீடுகளில் இந்த ஆரத்தி எடுக்கப்படுகிறது.
யார் யாருக்கு ஆரத்தி: மனிதர்களுக்கு திருஷ்டிக்காக எடுக்கப்படுகிறது.. புதுமண தம்பதிகள் வீட்டுக்குள் நுழையும்போது, வெளியூர் பயணத்தை முடித்து வீடு திரும்பும்போதும், நோயாளிகள் குணமாகி வீட்டுக்கு வரும்போது, பிரவசம் முடிந்து தாயும், சேயும் வீட்டுக்கு வரும்போது, அல்லது ஏதாவது வெற்றி பெற்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது, மற்றவர்கள் கண் படக்கூடாது என்பதற்காக திருஷ்டி சுற்றுவார்கள்.
இவர்களை முன்னால் செல்லவிட்டு, பின்னால் அவர்கள் நடந்து வந்த பாதையில் ஆரத்தியை ஊற்றிவிட வேண்டும். இதனால், எந்த தீய சக்தியும் அவர்களின் பின்னால் வீட்டுக்குள் நுழையாது . அவர்கள் மீது தொற்றுக்கள் இருந்தாலும் நீங்கிவிடும். அதுமட்டுமல்ல, சரஸ்வதியின் நிறம் வெண்மை அதாவது சுண்ணாம்பு.. லட்சுமியின் நிறம் மஞ்சள், அதாவது மஞ்சள்.. இவை ஒன்றுசேரும்போது, சிவப்பு நிற திரவம் கிடைக்கும். இதனால், லட்சுமி, சரஸ்வதி இரண்டு தெய்வங்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
வெற்றிலை: ஆரத்தி எடுக்கும் போது வெற்றிலை கற்பூரம் வைக்க வேண்டுமா என்ற சந்தேகம் எழலாம்.. எல்லா நேரங்களிலும் இப்படி வைக்க வேண்டியது இல்லையாம்.. சிலர் அதில் ஒரு கரித்துண்டு போடுவார்கள். சிலர் வெற்றிலை போட்டு அதில் கற்பூரம் ஏற்றுவார்கள். வெற்றிலை போடுவதால் கற்பூரம் மிதந்து எரியும். கற்பூரம் கரைவது போல திருஷ்டி கரையும். சாதாரண நேரங்களில் வெறும் ஆரத்தி போதுமானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதில், கடவுளுக்கு ஆரத்தி எடுக்கும் போது, உங்களது வழிபாட்டு முறைக்கு ஏற்ப விளக்கு அல்லது கற்பூரத்தை தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, ஒரு திரி கொண்ட விளக்கையோ அல்லது ஐந்து அல்லது ஏழு திரிகள் கொண்ட விளக்கையோ தேர்வு செய்யலாம். அதேபோல், குலதெய்வத்தின்படி, எண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றிவைத்து, கடவுளின் பாதத்தில் 4 முறையும், தொப்புளில் 2 முறையும், வாயில் 1 முறையும், தலை முதல் பாதம் வரை 7 முறையும் என 14 முறை ஆரத்தி செய்ய வேண்டுமாம்.
-
வைகாசி விசாகம் 2026: எப்படி விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற முடியும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications