நெல்லி மரம் வாசலில் வைக்கலாமா? சின்ன நெல்லிக்காய் மரத்தை வீட்டில் வளர்த்தால் சொத்து சேருமாமே.. வாவ்
சென்னை: வீட்டில் சில வகையான மரங்களை வளர்க்கக் கூடாது என்பார்கள்.. அந்தவகையில் நெல்லிக்காய் மரங்களை வீட்டு வாசலில் வைக்கலாமா? வைக்க கூடாதா? இதுகுறித்து ஆன்மீகம் சொல்வதென்ன? அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நெல்லி மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது என்று சிலர் சொல்கிறார்கள்.. ஒரே ஒரு மரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு போய் உங்கள் வீட்டில் நட்டு வைத்தால் மரத்தில் காய்கள் காய்க்காது. இந்த மரத்துடன் சேர்த்து இன்னொரு மரமும் நட்டு வைக்கும்போதுதான் அதில் காய்கள் காய்க்க ஆரம்பிக்கும்.

புளிப்புத்தன்மை: அதிலும், புளிப்பு தன்மையுள்ள மரங்களுக்கு அடியில் மற்ற செடிகள் முளைப்பதில்லை. அதுபோலவே பெரிய நெல்லிக்காய் மரத்திற்கு பக்கத்தில் செடிகளும் முளைக்காது என்பார்கள்.. குறிப்பாக, புளியமரம், பெரிய நெல்லிக்காய் மரம் போன்றவை அமிலத்தன்மை கொண்டுள்ளதால் தேனீக்களும், வண்டுகளும்கூட இந்த மரங்களில் வந்து அமர்வதில்லையாம். இதனால் எளிதாக மகரந்த சேர்க்கையும் நடைபெறுவதில்லை.. இதன்காரணமாக பெரிய நெல்லிக்காய் மரத்தில், காய்களும் காய்க்காமல் போய் விடுகின்றன.
இதுவே நெல்லிக்காய் மரம் தோட்டத்தில் இருந்தால், அதிக பூச்சிகள் வந்து மகரந்தச் சேர்க்கை நன்றாக நடைபெற உதவுகிறது... காய்களும் தோட்டத்தில் அதிகமாக காய்க்கிறது என்பார்கள்.
லட்சுமி கடாட்சம்: எனினும், நெல்லிக்காய் மரங்கள் லட்சுமி கடாட்சம் நிறைந்தவையாக கருதப்படுகிறது. அதனால், சிறிய செடியாக வாங்கி வைத்து வீட்டில் நெல்லிக்காய் மரம் வளர்க்கலாம்.. இந்த மரம் வளர, வளர வீட்டின் செல்வமும் வளரும் என்பது நம்பிக்கையாகவும் உள்ளது... அதுமட்டுமல்ல, நெல்லி மரத்தை வளர்த்து வருவதால், வீட்டிலுள்ள துர்சக்திகளும், கண் திருஷ்டிகளும் விலகும்.. எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிலிருந்து வெளியேறும்..
முக்கியமாக வறுமை வீட்டிலிருந்து வெளியேறி, பணம், சொத்துக்கள் வந்து சேரும். பதவி உயர்வு போன்றவை கிடைத்து, சமூக அந்தஸ்து கிடைக்கும். நெல்லி மரத்தை வைக்க முடியாதவர்கள், நெல்லிக்காய் சாறு குடிக்கலாம்.. நிதி நெருக்கடிகள் இதனால் மெல்ல மெல்ல தீரும்.. தொழிலில் தடங்கல் இருந்தாலும் அவை விலகிவிடுமாம்.
ஆரோக்கியம்: அதுமட்டுமல்ல, திருமகளான லட்சுமிதேவியின் வடிவமான நெல்லி மரம், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, நெல்லிக்காய். ஆயுர்வேத மருந்துகளும் பல, நெல்லிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. நெல்லி மரத்தின் உயர்வைப் பற்றி, "அகத்தியர் குணபாடம்" என்ற நூலிலும் விரிவாகக சொல்லப்பட்டுள்ளது.. எனவே உயர்வை தரக்கூடிய சிறிய நெல்லிமரம், வீட்டு வாசலில் தாராளமாக இருக்கலாம் என்கிறார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications