அதிர்ஷ்டம் தரும் குப்பைமேனி வேர்.. வறுமையை வேரோடு சாய்க்கும் எளிய குப்பைமேனியின் பரிகாரம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குப்பைமேனி இலையில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா? ஆன்மீகத்தில் குப்பைமேனி செடிகளுக்கான முக்கியத்துவம் என்னென்ன தெரியுமா? வீட்டில் பணக்கஷ்டம் தீர, குப்பைமேனி வேரின் பரிகாரம் என்ன? சுருக்கமாக பார்க்கலாம்.

குப்பைகளில் வளரக்கூடியது இந்த குப்பைமேனி செடி.. இதிலுள்ள இலைகளில் அகாலிபமைடு, காலிபோல் அஸிடேட், அகாலிபைன், டிரைஅஸிட்டோனமைன், கெம்பெரால் போன்ற வேதிப்பொருட்கள் இருப்பதால், ஏராளமான நோய்களை குணப்படுத்துகின்றன.

spirituality kuppaimeni plant kuppaimeni root

மூலநோய் முதல் ஆஸ்துமா வரை, குணப்படுத்தும் தன்மை குப்பை மேனி இலைகளுக்கு உண்டு. மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள், ரத்த மூலம் தொந்தரவு உள்ளவர்கள், சின்ன வெங்காயம், வாழைப்பூவை இந்த குப்பைமேனி இலைகளுடன் சேர்த்து அரைத்து, 3 நாட்கள் சாப்பிட்டால் மூலநோய், ரத்த மூலம் உடனடியாக கட்டுக்குள் வரும்.

மூட்டுவலி: தலைவலி இருந்தாலும், மலச்சிக்கல் இருந்தாலும், மூட்டு வலி தொந்தரவு இருந்தாலும், நரம்புகள் பலவீனமாக இருநதாலும், அனைத்துக்குமே இந்த குப்பைமேனி இலையின் சாறுகளே மருந்தாகின்றன.. குப்பைமேனி இலையை உணவில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நரம்பு பிரச்சனைகள், கால்வலி, முழங்கால், மூட்டுவலிகள் வருவதில்லை.

இதுபோல இன்னும் பல மருத்துவ நன்மைகளை குப்பைமேனி இலைகள் தந்தாலும், ஆன்மீகத்திலும் குப்பைமேனிக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது.. இந்த செடியின் வேரை தாந்திரீகத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.. குறிப்பாக எந்தவிதமான கெட்ட சக்தியும் நம்மிடம் அணுகாமல் இருக்க, குப்பைமேனி செடியின் வேர்கள் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன.

வேர்கள்:
இந்த வேர்களை சுத்தம் செய்து, உரலில் இடித்து எடுத்துக்கொண்டு அதில், தண்ணீர் விட்டு, அதன் சாறை மட்டும் உணவில் கலந்து சாப்பிடும்போது, எந்த துர்சக்தியும் நெருங்குவதில்லையாம். வசியம் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்குகூட, அவர்களுக்கு தெரியாமலேயே, அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் இந்த குப்பைமேனி வேரின் சாற்றினை கலந்து தரும்போது, அவர் பூரண நலன் பெற்றுவிடுவாராம்.

அல்லது இந்த குப்பைமேனி வேர்களை குளிக்கும் தண்ணீரில் கலந்து 48 நாட்கள் குளித்து வந்தால், கெட்ட சக்திகள், எதுவும் அண்டாது என்பது நம்பிக்கையாகும். அதேபோல பணக்கஷ்டம் நீங்கி, வீட்டில் நிதிநிலைமை சீராக, பௌர்ணமி தினத்தில் மாலை 6-7 மணிக்கு ஒரு சிறிய பரிகாரம் செய்யலாம்.

பச்சை கற்பூரம்: இதற்கு ஒரு சிறிய மஞ்சள் துணியில், அரை ஸ்பூன் சோம்பு, 3 ஏலக்காய், 1 பச்சைக்கற்பூரத்தை சேர்த்து சிறிய முடிச்சு போல கட்டிக் கொள்ள வேண்டும்.. பிறகு ஒரேயொரு குப்பைமேனி வேர் எடுத்து சத்தம் செய்து, அதனுடன் சேர்த்து, இந்த முடிச்சியை சேர்த்து கட்டி கொள்ள வேண்டும். இதை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துவிட்டால் போதும். மூட்டையிலுள்ள அனைத்து பொருட்களையும் அவ்வப்போது மாற்றிக்கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+