Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெவுளி சத்தம் கேட்குதா? உடைந்த விளக்கு நல்லதா? கண்ணாடியை பூஜை அறையில் வைத்தால் செம மகிழ்ச்சி வாழ்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூஜை அறையில், விளக்குகள் உடைந்துவிட்டால் நல்லதா? கெட்டதா? பூஜையறையில் பல்லிகள் இருப்பது நல்லதா? கெட்டதா? பூஜை அறையில் கண்ணாடி வைப்பது ஏன்? இவைகள் குறித்தும் நம்முடைய முன்னோர்கள் பல்வேறு விஷயங்களை தெளிவாக சொல்லி வைத்திருக்கிறார்கள்.

பூஜையின்போது பொருள் ஏதாவது சிலசமயம், நம்முடைய கையிலிருந்து தவறுதலாக நழுவி கீழே விழுந்துவிடும்.. எதிர்பாராத விதமாக இவ்வாறு நடந்தாலும, சில பொருட்கள் தரையில் விழுந்தால் அது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை.

Spirituality old lamp Pooja Room

அந்தவகையில், பழைய விளக்குகள் உடைந்து விட்டாலோ அல்லது விளக்குகளில் ஏதாவது சேதாரம் ஏற்பட்டிருந்தாலோ, அதுபோன்ற விளக்குகளை நாம் பயன்படுத்தக்கூடாது. எப்போதுமே புதிய விளக்கையே பயன்படுத்த வேண்டும்..

பழைய விளக்குகள்

அதேபோல, பூஜைக்கு பயன்படுத்திய பழைய விளக்குகளை சிலர் நினைவுகளுக்காக, பூஜையறையிலேயே வைத்திருப்பர். ஆனால், இதை தவிர்க்க வேண்டுமாம். பயன்படுத்தாத எந்த பொருளையுமே பூஜையறையில் வைக்ககூடாது என்பார்கள்.

எப்போதுமே பூஜையறை சுத்தமாக இருக்க வேண்டும்.. பூஜை பொருட்களும், பூஜை செய்வதற்கு முந்தைய நாளே சுத்தம் செய்துவிட வேண்டும்.. பூஜை அறையில் சுவாமி படங்கள், முன்னோர்கள் படங்களை வைத்தும் வழிபாடு செய்வதைபோல, கண்ணாடியை வைக்க வேண்டும் என்பார்கள்.

பூஜையறையில் கண்ணாடி எதற்கு

காரணம், குலதெய்வமும் முன்னோர்களும், மறைமுக தெய்வங்கள் கண்ணாடியில் பிரதிபலிப்பதாக சொல்வார்கள்.. அவ்வளவு ஏன்? குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள், கண்ணாடிக்கு சந்தனப் பொட்டு வைத்து பூஜை செய்தால், குல தெய்வம் அந்த கண்ணாடியில் முகத்தை காண்பிக்குமாம். எனவே, பூஜையறையில் கண்ணாடியை வைப்பது, நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் அதிகரித்து அதிர்ஷ்டத்தை பெருக்கி தருமாம்..

அதேபோல, பூஜையறையில் பல்லிகள் தென்பட்டால் அது மிகவும் மங்களகரமானது... நிதி நிலைமை சீராகி, விரைவில் செல்வம் வரப்போகிறது என்று அர்த்தமாம்.. அதையும்விட சிறப்பு என்னவென்றால், புது வீட்டுக்குள் நுழையும்போது பல்லி தென்பட்டால், வரும் நாட்கள் சிறப்பாக இருக்க போகிறது என்று அர்த்தமாம்.

பல்லி சத்தம் போடலையா

அதைவிட சிறப்பு என்னவென்றால், தீபாவளி தினத்தில் வீட்டில் பல்லி இருந்தால், அந்த வருடம் முழுவதும் லட்சுமி தேவியின் அருளாசி கிடைக்கும் என்பார்கள். அதையும்விட சிறப்பு என்னவென்றால், ஒரே இடத்தில் 3 பல்லிகளை பார்த்தால், விரைவில் குட்நியூஸ் வரப்போகிறது என்று அர்ததம். இதற்கெல்லாம் காரணம், குலதெய்வத்தின் ரூபமாக பல்லி கருதப்படுவதுதான்.. பல்லியை பார்ப்பது முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு சமமாகும்.

அதேபோல நீங்கள் ஏதாவது முடிவுகளை எடுக்க தடுமாறினால், அல்லது கெட்டதை சிந்திக்கும்போதும், பல்லி சத்தம் கேட்கும்.. இந்த சத்தத்தை கேட்டுவிட்டதும், மனதில் உள்ள குழப்பம், தடுமாற்றம் நீங்கி, நேர்மறை எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். சில சமயம் பல்லி சத்தம் கேட்காமல் இருந்தால், சாம்பிராணி தூபம் போட்டு, வீடு முழுவதும் காட்ட வேண்டும். இப்படி 5 வெள்ளிக்கிழமைகளில் செய்து வந்தால், முன்னோர்களின் ஆசிர்வாதம் தொடர்ந்து கிடைத்து கொண்டே இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+