சமையலறையில் கல் உப்பு எங்கே வைக்கணும்? உப்பை இப்படி எடுத்தால் தப்பாயிருமே? நல்லது அள்ளித்தரும் உப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருவருடைய வீட்டில் லட்சுமி கடாட்சியத்தை கொடுக்கக்கூடியது உப்பு.. இந்த உப்பினை சமையலறையில் எப்படி, எங்கே வைக்க வேண்டும்? அடுப்புக்கு பக்கத்தில் வைக்கலாமா? உப்புக்கு ஆன்மீகத்தில் உள்ள முக்கியத்துவம் என்னென்ன? சுருக்கமாக பார்ப்போம்.

பொதுவாக, சில வீடுகளில் உப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை.... கல் உப்புக்களை தவிர்த்துவிட்டு சால்ட் பயன்படுத்தப்படுவதும் அதிகரித்து காணப்படுகிறது. வீட்டில் கல் உப்பு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.

spirituality salt

அந்தவகையில், சமையலறையில் அடுப்பை நோக்கி பெண்கள் சமையல் செய்தால், வலதுகை பக்கத்தில் உப்பு ஜாடி இருக்க வேண்டும்... எப்போதுமே கல் உப்பினை அதற்குரிய ஜாடியில் போட்டு வைக்க வேண்டும்.. அதேபோல, உயரத்தில் வைத்துவிடாமல், கையை நீட்டி எடுக்கும் அளவுக்கு பக்கத்திலேயே உப்பு ஜாடியை வைத்திருக்க வேண்டும்.

மகாலட்சுமி: உப்பு ஜாடி, மூடி இரண்டுமே சுத்தமாக பளிச்சென இருக்க வேண்டும். மகாலட்சுமியின் அம்சம் என்பதால், அதில் அழுக்கு படிய விடக்கூடாது. அதற்காக மாலை 6 மணிக்கு மேல் உப்பு ஜாடியை கழுவக்கூடாது. வெள்ளி மற்றும் செவ்வாய்களில் உப்பு ஜாடியை கழுவலாம்.. உப்பை எடுக்கும்போது, சுத்தமான கையால் எடுக்க வேண்டும்.. அழுக்குடன், அசுத்தமான கையால் உப்பை தொடும்போது, வீட்டில் பணக்கஷ்டம் வந்துவிடுமாம்.

பீங்கான் போன்ற ஜாடியில் உப்பு போட்டு வைத்திருக்க சொல்வதற்கு காரணம், இந்த பீங்கான் பாத்திரத்தில் ஒளி உட்செல்வதில்லை.. அதுமட்டுமல்ல, அயோடின் ஒரு வேதிப்பொருளாகும்.. இது உலோக பாத்திரங்களுடன் தாக்கம் புரியக்கூடியது.. சூரிய வெப்பம் பட்டுவிட்டால், அயோடின் அழிவடையும். அதனால்தான், உப்பினை வேறு உலோகத்துடன் தாக்கம் புரியாத வகையில் பாதுகாத்து பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள்.

அயோடின் சத்து: அடுப்புக்கு பக்கத்திலேயே உப்பு ஜாடியை வைக்கக்கூடாது என்பதற்கும் இதுதான் காரணம்.. உப்பிலுள்ள அயோடின் சத்துதான் நமக்கு இன்றியமையாது.. வெப்பம் பட்டுவிட்டால் அயோடினும் அழிந்துவிடும்.
உப்பு எப்போதுமே கீழே கொட்டிவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.. அப்படி கொட்டினால் அது துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. ஒருவேளை தவறி விழுந்தாலும், கால்களால் உப்பை தொடக்கூடாது.

பழைய உப்பு: பழைய உப்பை ஜாடியில் வைத்திருக்காமல், அதை நீக்கிவிட்டு புதிய உப்புக்களை சேர்த்து வரவேண்டும்.. இதனால் வீட்டில் நிலவும் எதிர்மறை ஆற்றல் விலகிவிடும். பழைய உப்புகளை கரைத்து வீட்டை சுற்றிலும் தெளிக்கலாம். எப்போதுமே கல் உப்பு வீட்டில் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+