வெற்றி தரும் வெட்டிவேர்.. வீட்டில் பணம் தங்க, கண் திருஷ்டி நீங்க.. வெட்டி வேர் பரிகாரம்.. ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்மீகத்தில் வெட்டி வேர்களுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உள்ளது.. எதிர்மறை சக்திகளை விரட்டி, பணத்தை ஈர்க்க செய்யும் தன்மை வெட்டி வேர்களுக்கு உண்டு.. வீட்டிற்குள் பாசிட்டிவ் எனர்ஜி பெருக, இந்த வெட்டிவேர்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?

மருத்துவ குணம் நிறைந்த வெட்டிவேர்களை வீடுகளில் எப்போதுமே வைத்திருக்க வேண்டும்.. பணத்தை ஈர்க்க செய்யும் இந்த வேட்டிவேர்கள், கண் திருஷ்டியை போக்கக்கூடியது..

spirituality vetiver roots vetiver pariharam


எலுமிச்சம்பழம்:
வெள்ளிக்கிழமைகளில் பூஜை அறையில், ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரில் வெட்டிவேரை போட வேண்டும்.. அதனுடன் ஒரு முழு எலுமிச்சை பழத்தையும் சேர்த்துவிட வேண்டும். இந்த 2 பொருட்களிலிருந்தும் வரும் ஆற்றலானது, வீடு முழுவதும் பரவ செய்து மகாலட்சுமியின் அருளை கிடைக்கச் செய்யும்.

வீட்டில் நிறைய பிரச்சினையில் உள்ளவர்கள் இதை தொடர்ந்து செய்யலாம்.. ஆனால், 3 நாட்களுக்கு ஒரு முறை அதில் எலுமிச்சை பழத்தை மட்டும் மாற்றி விட வேண்டும். தண்ணீரை வாரம் ஒரு முறை அல்லது தினமும் கூட மாற்றலாம்... வெட்டி வேரை மட்டும் அப்படியே வைத்திருக்கலாம். எந்த பாதிப்பும் ஏற்படாது.

வெள்ளைத்துணி:
அதேபோல, ஒரு சிறிய கிண்ணத்திலும் இந்த வெட்டிவேரை போட்டு வைக்கலாம்.. ஒரு வெள்ளை துணியில் வெட்டிவேரை போட்டு முடிந்து, வீட்டிலுள்ள அறைகளில் வைத்தால், வாசம் அதிகமாகும். இந்த வாசம் சுவாச கோளாறுகளை சரிசெய்வதுடன், மன அழுத்தத்தையும் போக்கிவிடும்.

எனினும் இந்த வெட்டிவேர்களை மாதம் ஒரு மாற்றிவிட வேண்டும். பழைய வெட்டிவேரை, கற்பூரம் வைத்து எரித்து விட வேண்டும். மீண்டும் புதிய வெட்டிவேரை மாற்றி வைக்க வேண்டும்.

கண் திருஷ்டி: கண் திருஷ்டியை போக்கக்கூடிய சக்தி வெட்டிவேர்களுக்கு உள்ளது.. எனவே, வியாபாரம் செய்யும் இடத்திலும், பணம் புழங்கக்கூடிய இடத்திலும் இந்த வெட்டிவேர்களை போட்டு வைக்கலாம்.. இதனால், உங்களை சுற்றியிருக்கும் திருஷ்டிகள் நீங்கி, தொழில் விருத்தி அடையும்.. பணமும் தங்கு தடையின்றி வரத்துவங்கும்.

மஞ்சள் துணியில் படிகாரம், எலுமிச்சை, மஞ்சள் அரிசி, ஒரு காசு போட்டு, அதனுடன் சிறிது வெட்டி வேரும் வைத்து கட்டி வாசலில் தொங்க விட்டால், தடைப்பட்ட எல்லா காரியங்களும் உங்களுக்கு நீங்கிவிடும்.. நீங்கள் நினைத்த காரியம் வெற்றிகரமாக முடிய, வெட்டிவேர் துணைபுரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+