கழுத்தை நெரிக்கும் கடன் தீர துவரம் பருப்பு, பச்சரிசி பரிகாரம்.. சிறிய கற்பூரவள்ளி இலை போதுமே! அபாரம்
சென்னை: கடன் தொல்லையில் சிக்கிவிட்டால், அதிலிருந்து மீள்வது என்பதே பெரும் பாடாகிவிடும்.. ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு யுகமாக நகரும்.. இதனால் மனநிம்மதி, குழப்பங்கள், சங்கடங்கள், இடையூறுகள், மனஅழுத்தங்கள் ஏற்படும்.. அதிலும் ஆரோக்கிய குறைபாடும் சேர்ந்துவிட்டால், அந்த பிரச்சனைகளிலிருந்து மீளவே முடியாது.. கடன் தொல்லை நீங்க, புகழ் செல்வாக்கு அமையாது. இவை அனைத்துமே தேடி வர வேண்டுமானால் எளிய பரிகாரங்கள் நமக்கு கை கொடுக்கின்றன. அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.
கடன் பிரச்சனை அதிகமாக இருப்பவர்கள், சங்கு வாங்கி வீடுகளில் வைக்கலாம்.. இந்த சங்கிலிருந்து வெளியாகும் ஓம் ஒலியானது, துர்சக்திகளை அழித்துவிடும்..

இந்த சங்குகள், லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருள் என்பதால் பூஜையறையில் வைக்க வேண்டும். இதனால், வீட்டில் பணம் தங்குவதுடன், சகல செல்வங்களும் சேர்ந்து கொண்டே இருக்குமாம்.
குலதெய்வம் கோயில்
அதேபோல, உங்களது குல தெய்வ கோவிலுக்கு சென்று, எடைக்கு எடை பச்சரிசியை தானமாக வழங்குவதன் மூலம் கடன் பிரச்சனை தீரும்.. அல்லது பச்சரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து குல தெய்வ கோவிலில் எறும்புக்கு உணவாக தந்து வந்தாலும், கடன் பிரச்சினை தீரும் என்பார்கள்.
அதேபோல வெள்ளிக்கிழமைகளில், நாட்டு சர்க்கரையில் செய்த இனிப்பு பலகாரங்களை கற்பூரவள்ளி இலை அல்லது அரச இலைகளின் மீது வைத்து, எறும்புகளுக்கு உணவாக வைக்கலாம்.. இதனால் வீட்டிலுள்ள பண தட்டுபாடுகள் நீங்குவதுடன், வருமானத்தில் தடை, தொழிலில் நஷ்டம் போன்றவை நீங்கும்..
லட்சுமி தாமரை
எப்போதுமே வீடுகளில் கல் உப்பு, பருப்பு, ஊறுகாய்களை நிரப்பி வைத்திருக்க வேண்டும்.. வீட்டிற்கு வந்து செல்லும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் அவசியம் தரவேண்டும். இதனால், தெரியாமல் செய்த பாவங்களும் விலகிவிடும் என்பார்கள்.
கோவிலுக்கு சென்றால், லட்சுமி மீது வைத்த தாமரையை எடுத்துவந்து, பச்சை பட்டில் வைத்து மடித்து பணப்பெட்டியில் வைத்தாலும் வீட்டிற்குள் பணம் பெருகும் என்பார்கள்.. செவ்வாய்கிழமைகளில் விநாயகருக்கு வெற்றிலை மாலையிட்டு வழிபட்டு வந்தாலும் கடன் பிரச்சினை தீரும்.
துவரம் பருப்பு
அதேபோல சமையலறையில் துவரம் பருப்பை வைத்து எளிய பரிகாரம் ஒன்று செய்யலாம்.. இதற்கு சிறிய கிண்ணத்தில் ஒரு கைப்பிடி துவரம் பரப்பு எடுத்துக்கொண்டு அதன்மீது 3 செவ்வரளி பூக்களை வைக்க வேண்டும். செவ்வாய் பகவானுக்கும் அரளியும், துவரம் பருப்பும் பிடித்தமானதும்கூட,
இப்போது பூஜையறையில் விளக்கேற்றி வைத்து, கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள். துவரம் பருப்பு வைத்து வழிபாட்டை முடித்த பிறகு கிண்ணத்திலுள்ள பருப்பை மறுநாள் பறவைகளுக்கு இரையாக வைக்க வேண்டும். அல்லது பசு மாட்டிற்கு தண்ணீரில் ஊற வைத்து கொடுத்து விட வேண்டும்.
9 செவ்வாய்க்கிழமை பரிகாரம்
இந்த பரிகாரம் செய்து வர தீராத கடன்களை தீர்ப்பதற்கான வருமானத்திற்கு வழி ஏற்படும். இந்த துவரம்பருப்பு அரளிப்பூ பரிகாரத்தை 9 செவ்வாய்கிழமை தொடர்ந்து செய்து வந்தால், பண பிரச்சினை படிப்படியாக குறையும்.. மேலும், கந்த சஷ்டி நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சூட்டி வணங்கினாலும் நன்மைகள் பிறக்கும்.
சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர் பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்வதால் செல்வ வளம் பெருகும். செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடும்போது வீட்டில் பணம் பெருகும்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications