ஆன்மீகத்தில் 1008, 108 எண்ணின் முக்கியத்துவம் என்ன? அதிசயமான அறிவியல் நிஜம்! வாவ் சிவாலய வழிபாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாக, 7, 9 என்ற எண்களுக்கு ஈர்ப்பு தன்மையும், தனித்துவமான ஆற்றலும் உள்ளதாக கருதப்படுகின்றன. அதிலும், 108, 1008 என்ற எண்கள் தெய்வீக தன்மை கொண்டதாக சொல்லப்படுகிறது.. ஆன்மீகத்தில் 108, 1008 என்ற எண்கள் ஏன் முக்கியத்துவம் பெற்றுள்ளன தெரியுமா? இந்த எண்ணிக்கையை மட்டும் சிறப்பாக பயன்படுத்தப்படுவதன் நோக்கம் என்ன தெரியுமா?

108 தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டிக் கொள்வார்கள். தேங்காய் மட்டுமல்ல, மந்திரங்களையும் 108 முறை ஜெபிப்பார்கள்.. இதற்கும் முக்கிய காரணங்கள் உள்ளன.

108 1008 numbers Shivalinga temple 108 1008

பிறந்த நட்சத்திரம்

4 திசையிலுள்ள 27 நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் 108 ஆகும்.. 12 ராசிகள் 9 கோள்களை சேர்த்தாலும் 108 எண்கள் வரும். எனவேதான், பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்றால், குழந்தை பிறந்த நட்சத்திரம் மற்றும் பாதம் போன்றவை கணக்கில் கொள்ளப்படும்.

நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள் வீதம் 27 நட்சத்திரத்திற்கு 108 பாதங்கள் என்று வரும். இந்த 108 பாதங்களுக்கு 108 எழுத்துக்கள் என்பதால்தான், கடவுளுக்கு 108 பெயர்களைக் கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. சூரியனின் விட்டம், பூமியின் விட்டத்தை விட 108 மடங்கு அதிகம். பூமியிலிருந்து நிலவின் தூரம் 238,800 மைல்கள். இது நிலவின் விட்டத்தை விட 108 மடங்கு அதிகம்.

அதேபோல, தமிழ் வருடங்கள் 60, மாதங்கள் 12, நட்சத்திரங்கள் 27, கிரகங்கள் 9 என்று இவை அனைத்தையும் கூட்டிப் பார்த்தாலும் 108 என்ற எண்ணிக்கை வரும்..

இரவு பகல் எண்ணிக்கை

அதுமட்டுமல்ல அறிவியல் ரீதியாக பார்த்தால், நிமிடம் ஒன்றுக்கு 15 முறை மனிதனின் மூச்சு வெளியிடப்படுகிறது என்றால், 1 மணி நேரத்திற்கு 900 முறை வருகிறது. அப்படியானால், தினமும் 21,600 முறை வருகிறது. இதனை இரவு, பகல் என்று இரண்டாக பிரிக்கும்போது, 10,800 என்ற எண்ணிக்கை வருகிறது.

நம்முடைய உடலில் 108 உயிர் புள்ளிகள் இருப்பதாக வர்மக்கலை சொல்கிறது.. BP என்ற ரத்த அழுத்தம் அளவுகளும் 108 என்றே கணக்கிடப்படுகிறது. நம்முடைய உடலானது, 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தையே தாங்குகிறது.. இந்த டிகிரியின் அளவை தாண்டும்போது, உடலின் செல்கள் உயிரிழக்கக்கூடும்.

புத்த மதம் ஜெப மாலைகள்

சீக்கிய மதம், புத்த மதங்களில் பயன்படுத்தப்படும் ஜெப மாலைகளின் எண்ணிக்கையும் 108 ஆகும். புத்தர்கள் முக்தி பெற வேண்டுமானால் 108 படிகள் தாண்ட வேண்டும். ஜப்பான் ஷிண்டே சமயத்தில் 108 முறை மணி அடிப்பது வழிபாட்டில் உள்ளது. இந்த மணியை அடித்தால் மனித பாவம் விலகுமாம்.

இத்தனை ஆற்றல்கள், முக்கியத்துவம் இருப்பதால்தான், ஆம்புலன்ஸ்களுக்கு 108 என்றே பெயர் வைத்துள்ளனர். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஆய்வுகளின்படி, எப்போதுமே 1 என்ற எண்ணைதான் நம் கண்கள் கவனிக்கும். அதற்கு அடுத்தபடியாக 0 என்ற பூஜ்யம் ஈர்க்கப்படும்.. இதனை மனதில் வைத்துதான் 108 என்ற எண் அவசரத்துக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

1008 சிவலிங்கங்கள்

1008 எண்ணிக்கையும் இதுபோலத்தான்.. நம்முடைய உடம்பின் தலைப்பகுதியில் அமைந்திருக்கும் சஹஸ்ரார சக்கரத்தோடு தொடர்புடையது இந்த எண்ணாகும். குறிப்பாக ஆலயங்கள், வழிபாடுகள் மற்றும் மந்திர உச்சாடனங்களில். 1008 சிவலிங்கங்கள் கொண்ட ஆலயங்கள் ஆன்மீக ரீதியாக மிகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகின்றன.

1008 சிவலிங்கங்கள் கொண்ட கோயிலில் வழிபடுவது சிவபெருமானின் அருளை பெறுவதற்கும், நல்ல பலன்களை பெறுவதற்கும் சிறந்த வழியாகும்.. அதுமட்டுமல்ல, 1008 சிவலிங்கத்தை ஒரே இடத்தில் வழிபடுவதால் ஆயிரம் சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது..

அதேபோல, தேவியின் 1008 பெயர்கள் உள்ளன.. 1008 என்ற எண் பல ஆன்மீக நம்பிக்கைகளில் ஒரு புனிதமான எண்ணாகக் கருதப்படுகிறது. இந்து மட்டுமல்லாமல் சமண மற்றும் கிறிஸ்தவ மதங்களில் இது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ஸ்ரீ இராமானுஜரின் 1008-வது அவதார நாள் ஆன்மீக ரீதியாக கொண்டாடப்படுகிறது.

பரதநாட்டியத்தில் கரணங்களின் எண்ணிக்கையும் 108 ஆகும். ஒவ்வொரு செய்கையும் 108 என்பார்கள்.. முக்திநாத் என்ற இடத்தில் 108 நீரூற்றுகள் இருக்கிறதாம்.. அதேபோல உத்திரகாண்டில் 108 சிவசன்னதிகள் இருக்கின்றனவாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+