ருத்ராட்சத்தை குழந்தைகள் அணியலாமா? எந்த ராசிக்கு எத்தனை முகமுள்ள ருத்ராட்சை அவசியம்? ஆன்மீக பலன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிவனின் கண்களிலிருந்து உருவானதாக ருத்ராட்சம் கருதப்படுகிறது.. எனவேதான், சிவபக்தர்கள் ருத்ராட்சையை கட்டாயம் அணிந்திருப்பார்கள். ஆனால், பெண்களும் ருத்ராட்சையை அணியலாமா? குழந்தைகள் அணியலாமா? எந்தெந்த நட்சத்திரம் உள்ளவர்கள், எத்தனை முக ருட்ராட்சத்தை அணியலாம்? என்பது குறித்து சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
ருட்சைகள் உடலுக்கு நன்மை தரக்கூடியவை.. மிகச்சிறந்த ஆண்டிபயாடிக்காக கருதப்படுகிறது ருட்ராட்சை. நோய் தொற்றுக்களில் இருந்து காக்கிறது.. நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குகிறது. மன பதற்றம், மன அழுத்தம், நீரிழிவு இதய நோய், கேன்சர் போன்றவற்றிலிருந்து காக்கக்கூடியது இந்த ருத்ராட்சை. புண்கள், காயங்களை ஆற்றக்கூடியது. உடலிலுள்ள உஷ்ணத்தை ஈர்த்து, குளிர்ச்சியை தரக்கூடியது. நமது சுவாசம் சுத்தப்படுத்தப்படுகிறது.

குழந்தைகள் அணியலாமா
ருத்ராசையை அணிபவர்களின் மனம் அமைதி பெறும்.. முன்னேற்றம், செல்வம், மகிழ்வான வாழ்க்கை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.. அந்தவகையில், ருத்ராட்சத்தில் கிட்டத்தட்ட 21 முகங்கள் வரை கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. இதில், ஒரு முகம் கொண்ட ருத்ராட்சம் மிகவும் சக்தி வாய்ந்தது.
ஆண்கள் எந்த வயதாக இருந்தாலும் அவர்கள் ருத்ராட்சத்தை அணியலாம். வெறும் ருத்ராட்ச மாலையை கூட அணியலாம். பெண்களும் ருட்ராட்சையை அணியலாம். மாதவிலக்கு முழுவதும் நின்ற பிறகு ருத்ராட்சையை அணிந்து கொள்ளலாம். அந்தவகையில், 3,6,9 முக ருத்ராட்சங்கள் மட்டும் அணியலாம்.
திதி, தாம்பத்யம் என இயற்கையாக நடக்ககூடிய நேரங்களில் ருத்ராட்சை அணியலாம்.. இதனை சிவப்பு, மஞ்சள், வெள்ளை நூல், அல்லது , தங்கம், தாமிரத்தில்கூட அணியலாம். கருப்பு நூலில் மட்டும் கோர்த்து அணிந்து கொள்ளக்கூடாது.
குழந்தைகளும் ருத்ராட்சம் அணியலாம். ஆனால், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே அணிவிக்கலாம். அதிலும், ஐந்து முக ருத்ராட்சம் அணிவது மிகவும் சிறப்பு.. எனவே, ஆண், பெண், குழந்தைகள் என அனைவரும் அணியலாம்.
ராசி நட்சத்திரங்கள் - முகங்கள்
அதேபோல, எந்த ராசிக்கு, நட்சத்திரத்திற்கு எத்தனை முகம் அமைந்துள்ள ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்றும் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.
அந்தவகையில், அஸ்வினி - 9 முகம். பரணி - ஆறுமுகம், 13 முகம். கார்த்திகை - 12 முகம். ரோகிணி - 2 முகம். மிருக சீரிஷம் - 3 முகம். திருவாதிரை - 8 முகம். புனர்பூசம் - 5 முகம். பூசம் - 7 முகம். ஆயில்யம் - 4 முகம். மகம் - 9 முகம். பூரம் - ஆறுமுகம், 13 முகம். உத்திரம் - 12 முகம். ஹஸ்தம் - 2 முகம். சித்திரை - 3 முகம். சுவாதி - 8 முகம். விசாகம் - 5 முகம். அனுஷம் - 7 முகம். கேட்டை - 7 முகம். மூலம் - 9 முகம். பூராடம் - ஆறுமுகம், 12 முகம்.
உத்திராடம் - 12 முகம். திருவோணம் - 2 முகம். அவிட்டம் - 3 முகம். சதயம் - 8 முகம். பூரட்டாதி - 5 முகம். உத்திரட்டாதி - 7 முகம். ரேவதி - 4 முகம் அணிந்து கொள்ளலாம்.,












Click it and Unblock the Notifications