கைசிக ஏகாதசி.. 365 வஸ்திரங்களில் அருள்பாலித்த ஸ்ரீரங்கம் நம்பெருமாள்.. பச்சைக்கற்பூரம் தூவி வழிபாடு
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் கைசிக ஏகாதசி விழாவை முன்னிட்டு 365 வஸ்திரங்கள் சாற்றப்பட்டு நம்பெருமாள் அருள்பாலித்தார். இன்றைய தினம் கற்பூர படியேற்ற சேவை கண்டருளி மூலஸ்தானம் சென்றடைந்தார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. இங்கு தேரோட்டமும் திருவிழாவும் நடைபெற்றாலும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது. அதே போல கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படும்.

கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ப்ரமோதினி என வழங்கப்படுகிறது. இது கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விரதமுறையைப் பின் பற்றுவதால் உயர்ந்த நன்மைகள் கிடைக்கும். பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும். நேற்றைய தினம் கைசிக ஏகாதசி விரதம் கடைபிடிக்கப்பட்டது.
கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் இந்த மகாத்மியம் இன்றும் வாசிக்கபடுகிறது. அப்பேற்பட்ட கைசிக மகாத்மியத்தை கோயிலுக்கு சென்று பெருமாள் முன்னோ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் இந்த உலகத்தில் உள்ள ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுண்டத்தை அடைவர் என்று பூமா தேவிக்கு வராஹ பெருமாளே கூறியிருக்கிறார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முதல் புறப்பாடாக நேற்று காலை உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, சந்தன மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், சந்தன மண்டபத்திலிருந்து மாலை புறப்பட்டு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
தொடர்ந்து, 2வது புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு இரவு 9.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 365 வஸ்திரங்களும், 365 தாம்பூலங்களும், அரையர் சேவையுடன் 365 கற்பூர ஆரத்தியும் சமர்ப்பிக்கப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இரவு 11.30 மணி முதல் நேற்று அதிகாலை 2 மணி வரை நம்பெருமாள் முன்பு கைசிக புராணம் எனப்படும் பக்தர் நம்பாடுவான் வரலாற்றை பக்தி சிரத்தையுடன் பட்டர்கள் படித்தனர். பின்னர், அதிகாலை 5.15 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு, 2ஆம் பிரகாரத்தில் மேலப்படி வழியாக 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை கண்டருளி, காலை 6 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். நம்பெருமாள் படியேறும்போது பக்தர்கள் பச்சை கற்பூரப் பொடியை நம்பெருமாள் மீது தூவினர். இதை ஏராளமானோர் தரிசனம் செய்து வழிபட்டனர்.
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா இன்னும் சில நாட்களில் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்க உள்ளது. பகல் பத்து ராப்பத்து விழா நடைபெறும். டிசம்பர் 23ஆம் தேதியன்று சனிக்கிழமை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருகை தருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications